திருவள்ளூரில் மேலும் 2 போலி டாக்டர்கள் கைது…!!

Read Time:2 Minute, 31 Second

201609241212077470_two-fake-doctors-arrested-in-tiruvallur_secvpfதிருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த மாதம் மர்ம காய்ச்சலுக்கு 9 சிறுவர்கள் பலியாகினர். இதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் டாக்டர் மோகனன், குடும்ப நல துறை இயக்குனர் தயாளன் தலைமையில் மருத்துவ குழுவினர் போலி டாக்டர்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் 33 போலி டாக்டர்களை பிடித்து உள்ளனர். திருவள்ளூர் பேரம்பாக்கத்தை சேர்ந்தவர் கோமகன் (33) பிசியோதெரபிஸ்ட். இவர் அதே பகுதியில் கிளினிக் அமைத்து 7 வருடமாக (அலோபதி) ஆங்கில மருத்துவம் பார்த்து உள்ளார்.

தகவல் அறிந்ததும் டாக்டர் மோகனன் மற்றும் மருத்துவ குழுவினர் விரைந்து சென்று கோமகனின் கிளினிக்கை ஆய்வு செய்தனர். அவர் பொது மக்களுக்கு ஆங்கில மருத்துவம் செய்தது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து மப்பேடு போலீசார் போலி டாக்டர் கோமகனை கைது செய்தனர்.

திருவள்ளூர் கடம்பத்தூரை சேர்ந்தவர் வசந்த குமார் (57) இவர் கடந்த 25 வருடமாக அங்கு கிளினிக் அமைத்து பொது மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.

நேற்று இரவு டாக்டர் மோகனன் தலைமையில் மருத்துவ குழுவினர் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது வசந்தகுமார் பிளஸ்-2 படித்து விட்டு மருத்துவம் பார்த்தது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து கடம்பத்தூர் போலீசார் போலி டாக்டர் வசந்தகுமாரை கைது செய்தனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விஜய் சேதுபதிக்கு தயாரிப்பாளர் கொடுத்த மிகப்பெரிய பரிசு..!!
Next post மணலியில் ஒரே குடும்பத்தில் 3 பேர் தீக்குளித்து தற்கொலை: மருத்துவ செலவுக்கு பணம் இல்லாததால் பரிதாபம்…!!