வாணியம்பாடியில் டிராக்டரில் சிக்கி பள்ளிக்கு சென்ற சிறுவன் சாவு…!!

Read Time:1 Minute, 58 Second

201609251516066085_tractor-accident-boy-died-in-vaniyambadi_secvpfவாணியம்பாடி நூருல்லா பேட்டையை சேர்ந்தவர் மன்சூர் அகமது. இவருடைய மகன் முகமது ஈசான் (வயது 9) காதர்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். வாணியம்பாடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பள்ளிகள் இயங்கும்.

பள்ளியில் தேர்வுகள் நடந்து வருகிறது. இன்று காலை முகமது ஈசானை அவரது தாத்தா நசீர் அகமது மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து சென்றார்.

காதர்பேட்டை ஜங்‌ஷன் பகுதியில் வந்தபோது டிராக்டர் ஒன்று வந்தது. அப்போது நசீர் அகமது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் விழுந்தார். பின்னால் இருந்த முகமது ஈசான் கீழே விழுந்து டிராக்டர் சக்கரத்தில் சிக்கினான். அவர் மீது டயர் ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கிய சிறுவன் சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தான்.

வாணியம்பாடி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனித வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் பலி…!!
Next post முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு இதைவிட ஒரு எடுத்துக்காட்டு இருக்க முடியுமா? வீடியோ