டெல்லி ஆஸ்பத்திரி கழிப்பறையில் 5 மாத சிசுவின் கரு: விசாரணைக்கு உத்தரவு…!!

Read Time:2 Minute, 6 Second

201609251204444010_five-month-old-foetus-found-in-toilet-of-delhi-hospital_secvpfடெல்லியின் தென்மேற்கு பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரி கழிப்பறைக்குள் கிடந்த 5 மாத சிசுவின் கரு ஏற்படுத்திய பரபரப்பை தொடர்ந்து இதுதொடர்பாக விசாரணை நடத்த ஆஸ்பத்திரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தென்மேற்கு டெல்லியில் உள்ள ஜாபர்பூர் கலான் பகுதியில் ராவ் துலா ராம் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. நேற்று காலை சுமார் 11 மணியளவில் இந்த ஆஸ்பத்திரியில் உள்ள பெண்கள் கழிப்பறைக்கு சென்ற சிலர் உள்ளே உயிரிழந்த நிலையில் ஐந்துமாத சிசுவின் கரு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுதொடர்பாக, ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்துவந்த மருத்துவர்கள் அந்தக் கருவினை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கு காரணமான அடையாளம் காணப்படாத பெண்மீது கிரிமினல் குற்றப்பிரிவு 316-ன்கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்துவரும் நிலையில், ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் விரிவான விசாரணைக்கு ஆஸ்பத்திரி நிர்வாகமும் உத்தரவிட்டுள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மங்கையர் கையில் வண்ணமயமாய் ஜொலிக்கும் கல்பதித்த வளையல்கள்…!!
Next post வாகனம் ஓட்டும் திறமையை பாருங்க…!! வீடியோ