திருப்பூரில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.8¼ கோடி நகை-பணம் பறிமுதல்: வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல்…!!

Read Time:2 Minute, 22 Second

201609260840487494_income-tax-officials-information-industrialist-home-jewel-rs_secvpfஇதுதொடர்பாக கோவை வருமானவரித் துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தொழில் அதிபர்களுக்கு அதிகளவில் வருமானம் வந்தும் அதற்குரிய வரியை செலுத்தாமல் இருக்கும் நிறுவனங்கள், அதன் உரிமையாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி கணக்கில் காட்டப்படாத பணத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

அதன்படி கோவை வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தொழில் அதிபர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இதில் திருப்பூரை சேர்ந்த தொழில் அதிபர் வீட்டில் மட்டும் ரூ.2 கோடி பணம் மற்றும் 25 கிலோ நகை மற்றும் முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.8¼ கோடி ஆகும்.

எனவே தொழில் செய்பவர்கள் அனைவரும் தவறாமல் வருமான வரி செலுத்த வேண்டும் என்றும், வருமானவரி செலுத்தாமல் இருப்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தி நகை பணம் பறிமுதல் செய்யப்படும். அதோடு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாய்ப்பால் கொடுப்பதால் மார்பகங்கள் தளருமா?
Next post மத்திய பிரதேசத்தில் குளத்தில் மூழ்கி 7 சிறுவர்கள் பலி…!!