அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: வணிக வளாகத்தில் சிலர் காயம்…!!

Read Time:2 Minute, 34 Second

201609261940318681_several-people-shot-in-texas-shopping-mall_secvpfஅமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணம், பர்லிங்டன் நகரில் உள்ள வணிக வளாகத்தில் கடந்த 23-ந் தேதி நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

அந்த சுவடு மறைவதற்கு முன் அங்கு மேரிலேண்ட் மாகாணம், பால்ட்டிமோர் நகரில் உள்ள ஒரு வீதியில் நேற்று முன்தினம் இரவு வெவ்வேறு முனைகளில் இருந்து ஒரே நேரத்தில் கைத்துப்பாக்கிகளுடன் வந்த 3 மர்ம நபர்கள், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் ஒரு 3 வயது பெண் குழந்தை உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் இன்று மீண்டும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. வணிக வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பத்தில் சிலர் காயமடைந்ததாக அமெரிக்க போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களுக்குள் இருந்த சுமார் 7 பேர் வரை காயமடைந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக கருதப்படும் நபர் போலீசாரால் சுடப்பட்டான் என்று டெக்சாஸ் அதிகாரிகள் கூறினர்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து வணிக வளாக பகுதியில் யாரும் நடமாட வேண்டாம் என்று அப்பகுதி மக்களுக்கு போலீசார் அறிவுறுத்தினர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாயின் சடலத்தை எரிக்க விறகின்றி தவித்த மகள்கள்! வீட்டுக் கூரையை பிரித்து அதில் எரித்த சோகம்…!!
Next post காட்பாடி அருகே 70 வயது மூதாட்டி கற்பழித்து கொலை: வாலிபரை கட்டி வைத்து அடி, உதை…!!