வகுப்பிற்கு வராததைக் கண்டித்த ஆசிரியரை குத்திக் கொன்ற மாணவர்கள்: டெல்லியில் பயங்கரம்…!!

Read Time:2 Minute, 2 Second

201609271308227873_for-poor-attendance-delhi-students-stab-teacher-in-class_secvpfடெல்லி நங்கலா பகுதியை சேர்ந்த அரசு பள்ளி இந்தி ஆசிரியர் முகேஷ்குமாருக்கும், 12-ம் வகுப்பு மாணவர்கள் இருவருக்குமிடையே வகுப்பறையில் வைத்து நேற்று பலத்த வாக்குவாதம் நடந்தது. வாக்குவாதத்தின் இறுதியில் மாணவர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தியால் முகேஷ்குமாரை மூன்று முறை குத்தினர்.

இதில் ஆசிரியர் ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார். உடனடியாக முகேஷ் அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

போலீஸ் விசாரணையில் வகுப்பிற்கு சரிவர வராததை ஆசிரியர் முகேஷ் கண்டித்ததால் மாணவர்கள் அவரைக் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முகேஷ் கொலையைக் கண்டித்து நங்கலா அரசுப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர் முகேஷ் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என டெல்லி துணை முதல்வர் சிசோடியா அறிவித்துள்ளார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிரிக்கெட் விளையாடியபோது தகராறு: இலங்கையில் 15 வயது சிறுவன் மட்டையால் அடித்துக்கொலை…!!
Next post குஜராத் கோவில் வளாகத்தில் பூசாரிகளை கோடரியால் வெட்டிக் கொன்ற கும்பல்…!!