பதவி விலகிய கிïபா அதிபருக்கு இன்று 80-வது பிறந்தநாள்

Read Time:1 Minute, 19 Second

castro_0.jpgகிïபா நாட்டின் அதிபராக பதவி வகித்து வந்த பிடல் காஸ்ட்ரோ, வயிற்றில் நடந்த அறுவை சிகிச்சை காரணமாக ஓய்வு எடுத்து வருகிறார். கடந்த ஜுலை 26-ந்தேதிக்குப்பிறகு அவர் மக்களை சந்திக்கவில்லை. அடுத்த 4 நாட்களில் திடீர் என்று பதவி விலகிய காஸ்ட்ரோ தனது சகோதரரை புதிய அதிபராக அறிவித்து நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இந்த நிலையில் கிïபா நாட்டு மக்களின் மனம் கவர்ந்த `ஹீரோ’வான பிடல் காஸ்ட்ரோவின் 80-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. பிறந்தநாள் விழாவுக்காக கோலாகல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

“எங்கள் தலைவரை பிறந்த நாளிலாவது நேரில் சந்திக்க ஆவலாக இருக்கிறோம். விழாவில் அவர் கலந்துகொள்ள முடியாவிட்டாலும் நாங்கள் விழாவை உற்சாகமாக கொண்டாடுவோம்.” என்று அந்த நாட்டு மக்கள் கூறி வருகிறார்கள்.

castro_0.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சமாதான தூதராக பணியாற்றிய தமிழர் தலைவர் சுட்டுக் கொலை
Next post இஸ்ரேல்- லெபனான் நாளை போர் நிறுத்த ஒப்பந்தம்: 33 நாள் சண்டை ஓய்கிறது