கொழும்பு கொள்ளுப்பிட்டி குண்டுத் தாக்குதல்

Read Time:1 Minute, 9 Second

colombo1.jpgகொழும்பு கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி பிளாசா வர்த்தக மையப் பகுதியில் இன்று பிற்பகல் 1.15 மணியளவில் புலிகள் மேற்கொண்ட பாரிய குண்டுத் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில் மூன்று சிவிலியன்களும், நான்கு இராணுவ கொமாண்டோக்களும் அடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகரின் பாதுகாப்புக்காக சென்ற டிபென்டர் ரக வாகனமே குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இச்சம்பவத்தில் பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

மேலும் 8 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

colombo1.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post லெபனானில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வாபஸ் ஆனது: கைப்பற்றிய நகரங்களை ஒப்படைத்தது
Next post புதுக்குடியிருப்பு தாக்குதலில் 43பேர் உயிரிழப்பு, 60பேர் படுகாயம்