மாதவிடாய் வலியை போக்கும் சூப்பரான வீட்டு வைத்தியம்…!!

Read Time:3 Minute, 51 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-2பெண்களுக்கு கருமுட்டை உருவாகும் போது ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் நிகழ்வுகள் ஏற்படுகிறது.

இந்த மாதவிடாய் நிகழ்வின் போது பெண்களுக்கு வயிற்றில் உள்ள கர்ப்பப்பையை சுற்றி இருக்கும் தசைகள் இறுக்கம் அடைந்து விடுகிறது.

இதனால் மாதவிடாயின் போது, பெண்களுக்கு தாங்க முடியாத வயிற்றுவலி, முதுகுவலி, இடுப்புவலி, தலைவலி, மன உளைச்சல், சோர்வு, உடம்புவலி போன்ற அனைத்து பிரச்சனைகளும் ஏற்படுகிறது.

எனவே மாதவிடாயின் போது இந்த மாதிரியான பிரச்சனைகளை தடுக்க நம் வீட்டில் உள்ளது அற்புதமான சில வழிகள்.

வெந்தய நீர்

வெந்தயத்தை முதல் நாள் இரவு ஊற வைத்து, மறுநாள் அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்தால், மாதவிடாய் மூலம் ஏற்படும் இறுக்கமடைந்த தசைகள் தளர்வாகி, வலிகள் குறைந்து விடும்.

இஞ்சி கருமிளகு தேநீர்

சிறிதளவு தண்ணீரை கொதிக்க வைத்து, அதனுடன் இஞ்சியை தட்டி போட வேண்டும்.

பின் அதை வடிகட்டி அதில் சிறிதளவு மிளகுப் பொடியை கலந்து குடிக்க வேண்டும். இதனால் வயிற்று வலி குறைந்து, உடல் புத்துணர்வாக இருக்கும்.

சூடான ஒத்தடம்

தண்ணீரை கொதிக்க வைத்து, பின் மிதமான சூட்டில் இறக்கி, அந்த தண்ணீரை ஒரு பாட்டிலில் ஊற்றி வயிற்றுப் பகுதியில் ஒத்தடம் கொடுத்தால், இறுக்கமடைந்த தசைகள் தளர்வாகி, வயிற்று வலி குறையும்.

நல்லெண்ணெய் மசாஜ்

நல்லெண்ணெயை சூடுபடுத்தி, மிதமான சூட்டில் அடிவயிற்றில் மசாஜ் போல செய்து தேய்த்தால் கர்ப்பப்பையை சுற்றி இருக்கும் சூடு குறைந்து குளிர்ச்சியைத் தரும்.

இதனால் மாதவிடாயின் போது ஏற்படும் கடுமையான வயிற்று வலி குறையும்.

சீரகம்

சீரகத்தை நீரில் போட்டு 20 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

பின் ஆறியது அதை வடிகட்டி குடித்தால், மாதவிடாயின் போது வயிற்றில் ஏற்படும் பாதிப்புகள் குணமாகிவிடும்.

சீமை சாமந்தி தேநீர்

சீமை சாமந்தி ஒரு வலி நிவாரணியாக செயல்படும் மூளிகையாகும்.

எனவே இந்த சீமை சாமந்தியை தேநீர் வைத்து குடித்தால், கர்ப்பப்பையை தளர்வடையச் செய்து புரோஸ்டா கிளாண்டின் சுரப்பை குறைக்கிறது. இதனால் வயிற்று வலியும் குறைந்து விடுகிறது.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காஷ்மோரா…!!
Next post மனைவி, பிள்ளைகளை கொலை செய்த கணவன் கைது! திருமலையில் கொடூரம்…!!