மனைவி, பிள்ளைகளை கொலை செய்த கணவன் கைது! திருமலையில் கொடூரம்…!!
Read Time:1 Minute, 7 Second
திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்த கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (13) காலை இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் 8 வயது மற்றும் 10 வயதுடைய பெண் குழந்தைகயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப தகராறு காரணமாகவே இந்த கொலை இடம் பெற்றுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதேவேளை, குடும்ப தகராறு இந்த கொலைகளுக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டுவருகின்றனர்.
Average Rating