அதிகமாக முடி வளர சூப்பரான ஐடியா இதோ…!!

Read Time:4 Minute, 7 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-1தலைமுடி பிரச்சனை தான் உலகில் பலருக்கும் தலையாய பிரச்சனையாக உள்ளது. ஆண்கள், பெண்கள் என இருபாலரும் தங்கள் தலைமுடி அடர்த்தியாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

தலைமுடி அதிகமாக வளரவும், ஆரோக்கியமாக இருக்கவும் செயற்கையான கெமிக்கல் கலந்த மருந்துகளை நாட வேண்டும் என்பதில்லை. இயற்கையே நமக்கு பல விடயங்களை தந்துள்ளது.

எண்ணெய் மசாஜ்

இந்த எண்ணெய் மசாஜை தலையில் செய்யும் போது அது நம் தலை முடி வேரை நல்ல பலமாக ஆக்கி, முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்கிறது.

இதை தேங்காய் எண்ணெய் கொண்டு செய்யலாம். ஒரு மணி நேரம் நன்றாக தலையை ஊறவிட்டு பின்னர் தலையை நீரை கொண்டு கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

உருளைகிழங்கு ஜூஸ்

உருளை கிழங்கு ஜூஸை வைத்து தலையில் மசாஜ் செய்வதால் முடி வளர்ச்சி அதிகரிக்கும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? இதற்கு உருளைகிழங்கை நன்றாக கழுவி அதன் தோல்களை உரித்து சிறு துண்டுகளாக நறுக்கி, அதை நன்றாக அரைத்து அதை தலைமுடிக்குள் ஊற்றி பொறுமையாக மசாஜ் செய்து பின்னர் தலையை நீரால் கழுவ வேண்டும்

வெங்காய ஜூஸ் :

வெங்காயத்தில் உள்ள இயற்கை சத்துகள் முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன. வெங்காயத்தை நறுக்கி பின்னர் அதை அரைத்து சிறிது தண்ணீர் செய்து தலை முடியில் மசாஜ் செய்யலாம். 15 நிமிடங்கள் தலையை அப்படியே ஊர விட்டு பின்னர் தலைக்கு ஷாம்ப் போட்டு குளிக்கலாம்.

முட்டை

முட்டையில் அடங்கியுள்ள புரத சத்தானது தலை முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்கிறது. முட்டையின் மஞ்சள் கருவை நன்றாக அரைத்து 10 நிமிடத்துக்கு தலையில் மசாஜ் செய்ய வேண்டும். இதை செய்வதின் மூலம் முடியின் நறுமணம் அதிகரித்து வளர்ச்சியும் கொடுக்கும்.

ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுதல்:

உணவே மருந்து என்ற பழமொழிக்கு ஏற்ப, நாம் சாப்பிடும் காய்கறிகள், பழங்கள் எல்லாமே முடி வளர்ச்சியை அதிகரிக்க பயன்படுகிறது. நாம் எவ்வளவுக்கு எவ்வளவு நல்ல சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுகிறோமோ அது நம் தலை முடி வளர்ச்சிக்கு பெரிதும் கை கொடுக்கிறது.

உடற்பயிற்சி :

சரியான நேரத்தில் சாப்பிட்டு, சரியான நேரத்தில் தூங்குவதுடன் சரியான அளவுக்கு உடற்பயிற்சிகளை செய்தால் அது நம் தலை முடியின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து முடி வளத்தை அதிகப்படுத்தும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெளியாகும் முன்பே விருது பெற்ற விஜய் சேதுபதி படம்…!!
Next post 11வயது சிறுவனுக்கு டெங்கு நுளம்பால் நேர்ந்த அவலம்…!!