வெளியாகும் முன்பே விருது பெற்ற விஜய் சேதுபதி படம்…!!

Read Time:1 Minute, 33 Second

201611131532580018_vijay-sethupathi-movie-award-for-before-release_secvpfபஞ்சாப் மாநிலத்தில் கடந்த 8-ந் தேதி தொடங்கிய ‘பயாஸ்கோப் சர்வதேச திரைப்பட விழா’ நேற்றுடன் முடிவுற்றது. இந்த விழாவில் 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த திரைப்பட விழாவில் விஜய் சேதுபதி தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மேற்கு தொடர்ச்சி மலை’ என்ற படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் விருது வழங்கி கவுரவித்துள்ளனர்.

‘மேற்கு தொடர்ச்சி மலை’ படத்தை அறிமுக இயக்குனர் லெனின் பாரதி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்தும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

ரிலீஸ் ஆவதற்கு முன்பே இப்படத்திற்கு விருது கிடைத்துள்ளது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்படம் ஏற்கெனவே கேரளாவில் நடைபெற்ற 12-வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்ட 18 திரைப்படங்களில் ஒன்றாக தேர்வானது என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்களே இதற்கு மேல் மனைவியிடம் திட்டு வாங்கினால் நாங்கள் பொறுப்பு கிடையாது…!!
Next post அதிகமாக முடி வளர சூப்பரான ஐடியா இதோ…!!