மனைவியை அடித்த பிரிட்டன் வாழ் இந்தியருக்கு 6 மாதம் சிறை…!!

Read Time:1 Minute, 43 Second

201611142321394097_indian-origin-lottery-winner-jailed-for-beating-wife-in_secvpfலண்டன் நகரில் மேற்கு பகுதியில் வசிக்கும் பிரிட்டன் வாழ் இந்தியர் பல்விந்தர் மல்ஹோட்ரா(30). இவருக்கு லாட்டரி சீட்டில் கடந்த ஜனவரி மாதம் 70 ஆயிரம் பவுண்ட் பரிசு கிடைத்தது.

இருப்பினும் சிறிது காலத்திற்கு பின்னர் கடந்த ஜூன் மாதம் பல்விந்தர் தனது மனைவி ஹர்தீப் கவுரை மூன்று முறை அடித்தார். அதேபோல் தன்னுடைய 5-வயது குழந்தை முகத்திலும் அடித்தார். அவர் வீட்டில் நடந்த பிக்னிக் நிகழ்ச்சியின் போது இவ்வாறு அவர் நடந்து கொண்டார்.

லாட்டரில் சீட்டில் பெற்ற பணத்தினை செலவு செய்வதில் இருவருக்கும் இடையே தொடர்ந்து பிரச்சனை நிலவி வந்ததால் இந்த சம்பவம் நடைபெற்றது.

இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில், பல்விந்தருக்கு 6 மாத சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல்விந்தர் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார் என்றும் அதனால் பல முறை மனைவியை தாக்கி உள்ளார் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் தன்னுடைய மனைவிக்கும், குழந்தைக்கும் தலா 1000 பவுண்டுகள் வழங்க வேண்டும் என்று கூறினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வறுத்த பூண்டை சாப்பிடுவதால் நம் உடம்பில் நிகழும் அற்புதம்…!!
Next post பெண்கள் தீண்டுவதால் ஆண்களுக்கு சிலிர்ப்பு ஏற்படுவது எதனால்?