பள்ளிக் குழந்தைகளுக்கு ஆசிரியராக மாறும் போலீஸ்காரர்கள்: பீகாரில் நெகிழ்ச்சி…!!

Read Time:1 Minute, 24 Second

201611151617050474_policemen-turn-teachers-in-bihar-evening-schools_secvpfபீகார் மாநிலத்தின் புர்னியா மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாலை நேர பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அங்குள்ள போலீஸ்காரர்கள் பகுதி நேர ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர்.

இதுகுறித்து புர்னியா மாவட்ட போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில் “எப்போது எல்லாம் எனக்கு நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் வெவ்வேறு கிராமங்களில் உள்ள மாலை நேர பள்ளிகளுக்கு சென்று குழந்தைகள் மற்றும் படிக்கத் தெரியாதவர்களுக்கு கல்வி பயில உதவுகிறேன்” என்றார்.

மாலை நேர பள்ளிகளில் குழந்தைகள் கல்வி பயில அவர்கள் பெற்றோர் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும், இதுபோன்ற முயற்சிகள் போலீஸ்காரர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையேயான நெருக்கத்தை அதிகரிக்க உதவி செய்கின்றன என புர்னியா மாவட்ட டிஐஜி திவாரி இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வியாபாரி குத்திக் கொலை: மது குடித்ததை தட்டி கேட்டதால் மருமகன் ஆத்திரம்…!!
Next post பல் துலக்கும்போது தப்பித்தவறி இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்…!!