பல் துலக்கும்போது தப்பித்தவறி இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்…!!
பொதுவாக நாம் எப்போது காலையில் எழுந்து, பற்களை நன்றாக துலக்கி, சுத்தமாக குளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
நாம் இந்த நல்ல பழக்கத்தை எப்போதுமே தவறாமல் கடைபிடித்து வந்தால், பல நோய்களை ஏற்படுத்தும் கிருமிகள் நம்மை அண்டாமல் பாதுகாப்பாக இருக்க முடியும்.
தினமும் பல் துலக்கும் போது, செய்யும் தவறுகள் என்ன என்பதை தெரிந்து, அதை சரிசெய்து கொண்டால், நாம் எப்போதும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழலாம்.
பல் துலக்கும் போது நாம் கவனிக்க வேண்டியவை
பல் துலக்குவதற்கு நீண்ட நாட்களாக ஒரே டூத் பிரஷைப் பயன்படுத்தினால், வாயில் கிருமிகளின் வளர்ச்சியை அதிகமாக்கிவிடும். எனவே ஒரு டூத் பிரஷை 2 மாதத்திற்கு மேல் பயன்படுத்தாமல், புதிய டூத் பிரஷை வாங்கி பல் துலக்க வேண்டும்.
காலையில் பற்களை துலக்கும் போது, 2 நிமிடமாவது நன்றாக துலக்க வேண்டும். இதனால் நம் வாயில் உள்ள கிருமிகள் வெளியேற்றப்பட்டு, பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
பற்களை துலக்கி முடித்ததும், குளியல் அறையில் டூத் பிரஷ் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் குளியல் அறையில் இருக்கும் கிருமிகள் டூத் பிரஷில் பரவும். எனவே அதை மீண்டும் பயன்படுத்தும் போது வாயில் கிருமிகள் நுழைந்து, பல் மற்றும் ஈறுகளை பாதிப்படையச் செய்யும்.
பற்களைத் துலக்கும் போது, நாக்கையும் சுத்தம் செய்ய வேண்டும். இதனால் நாக்கில் உள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுத்து, வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனையை ஏற்படுத்தாது.
பற்களைத் துலக்கிய உடனே நீரால் வாயைக் கொப்பளிக்காமல்,பற்களைத் நன்றாக துலக்கிய பின் 15 நிமிடம் கழித்து வாயைக் கொப்பளிக்க வேண்டும். இதனால் வாயில் உள்ள கிருகிகள் அழிந்து போய்விடும்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
Average Rating