கொழுப்புச்சத்து இல்லாத காளான்: கண்டிப்பாக சாப்பிடுங்கள்….!!
நாம் சாப்பிடும் அன்றாட உணவில் நமது உடல் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை அதிகமாக கொண்ட உணவுகளை சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.
காளானில் கொழுப்புச்சத்துக்கள் இல்லை எனவே இந்த காளான்களை அனைவரும் தங்களின் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
காளானில் 35% புரதச் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளதால், இந்த காளானை நம்முடைய அன்றாட உணவில் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் நமது உடலுக்கு தேவையான புரதமும், தேவையான சக்தியும் கிடைக்கிறது.
காளான் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
காளானை நாம் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால், நம் உடம்பில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைத்து, சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், இதய நோய் தாக்குவதை தடுக்கிறது.
காளானில் செரிமானத்தை அதிகப்படுத்தும் அமிலங்கள் அதிகமாக உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு காளான் சிறந்த உணவாக உள்ளது.
காளானில் இரும்புச்சத்து மற்றும் பலவிதமான விட்டமின் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளதால், இந்த காளான் நமது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
மருத்துவகுணம் அதிகமாக கொண்ட காளானை தினமும் சமைத்து சாப்பிடுவதால், காலரா, அம்மை நோய், விஷக்காய்ச்சல், மலேரியா போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.
தினமும் காளான் சூப் வைத்துக் குடித்து வந்தால், வயிறு தொடர்பான பிரச்சனைகள் மற்றும் ஆசனப்புண்கள் போன்ற பிரச்சனைகளை தடுத்து, நம்மை பாதுகாக்கிறது.
தாய்மார்கள் தங்களின் குழந்தைகளுக்கு கொடுக்கும் தாய்பால் குறைந்து விட்டால, காளான் சூப் வைத்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
இதயநோய் உள்ளவர்கள் தினமும் இந்த காளானை தங்களின் உணவில் சேர்த்து வந்தால், இதயத்தில் ஏற்படும் வலியை குறைத்து, நமது உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுக்கிறது.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
Average Rating