தேனி அருகே மனைவிக்கு தெரியாமல் புதுமாப்பிள்ளை 2 வது திருமணம்…!!

Read Time:1 Minute, 30 Second

201611251926351266_wife-unknown-bride-groom-second-marriage-theni_secvpfதேனி அருகே உள்ள ராஜாகளத்தை சேர்ந்தவர் தங்கம், இவரது மகன் வினோத்குமார்(வயது23). ஆட்டோ டிரைவர். இவருக்கும் பானுபிரியா(21) என்ற பெண்ணுக்கும் கடந்த 5.11.16-ம் தேதியன்று திருமணம் நடந்தது. ஒரு வாரகாலமே அவர்களது இல்லற வாழ்க்கை இனிமையாக கழிந்துள்ளது.

இந்நிலையில் வினோத்குமார் அல்லிநகரம் அம்பேத்கார் நடுத்தெருவை சேர்ந்த பிரியா(21) என்ற பெண்ணை மனைவிக்கு தெரியாமல் கடந்த 21-ந்தேதி 2-வது திருமணம் செய்துள்ளார். பிரியா ஏற்கனவே திருமணம் ஆனவர்.

சம்பவத்தன்று வினோத்குமார் 2-வது மனைவி பிரியாவை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். இதனை பார்த்த பானுபிரியா அதிர்ச்சி அடைந்தார். என்னுடைய வாழ்க்கையை சீரழித்துவிட்டீர்களே என்று அழுதார்.

பின்னர் அதுகுறித்து பானுபிரியா தேனி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வினோத்குமாரையும், பிரியாவையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேலூரில் காதல் திருமணம் செய்த வாலிபருக்கு அடி, உதை: பெண் வீட்டார் தாக்குதல்..!!
Next post திருவோணம் அருகே மாமியார் மீது மீன் குழம்பை ஊற்றிய மருமகன் கைது…!!