திருவோணம் அருகே மாமியார் மீது மீன் குழம்பை ஊற்றிய மருமகன் கைது…!!

Read Time:1 Minute, 49 Second

201611251722201674_mother-in-law-fish-kulambu-throw-arrested-nephew-thiruvonam_secvpfதஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள சிவவிடுதி தெற்கு தெருவை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (40). விவசாயி. இவரது மனைவி ஜோதி.

சத்திய மூர்த்திக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. அடிக்கடி குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்று சத்திய மூர்த்தி வீட்டுக்கு மாமியார் பெரிய நாயகி வந்திருந்தார்.அப்போதும் கணவன் – மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. சத்திய மூர்த்தி தனது மனைவியை அழைத்து மாமியாரிடம் ரூ. 10 ஆயிரம் வாங்கி தருமாறு கூறி உள்ளார். அதற்கு ஜோதி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் பெரிய நாயகியும் பணம் தர முடியாது என கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சத்திய மூர்த்தி வீட்டில் வைத்திருந்த சூடான மீன் குழம்பை தனது மாமியார் மீது ஊற்றினார்.

இதில் அவரது உடலில் காயம் ஏற்பட்டது. அவர் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து திருவோணம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

சப்-இன்ஸ்பெக்டர் ஜேசுதாஸ் வழக்கு பதிவு செய்து சத்திய மூர்த்தியை கைது செய்தார். அவர் ஒரத்தநாடு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேனி அருகே மனைவிக்கு தெரியாமல் புதுமாப்பிள்ளை 2 வது திருமணம்…!!
Next post திருட போன இடத்தில் அசிங்கப்பட்ட திருடர்கள்: வேடிக்கையான வீடியோ…!!