சைத்தான் படத்தில் சொந்த குரலில் பேச வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி: அருந்ததி நாயர்…!!
‘சைத்தான்’ படத்தில் விஜய் ஆண்டணி ஜோடியாக நடித்திருப் பவர் அருந்ததி நாயர். விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி இருக்கிறார். இது வருகின்ற டிசம்பர் 1-ந் தேதி வெளியாக இருக்கிறது.
இது பற்றி கூறிய அருந்ததி நாயர்…
“என்னுடைய திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்திருக்கும் ‘சைத்தான்’ படம் எனக்கு தேவதை.
என் மீது நம்பிக்கை வைத்து, என்னை சைத்தான் படத்திற்காக தேர்ந்தெடுத்த விஜய் ஆண்டனி சாருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ‘ஐஸ்வர்யா’ என்னும் கதாபாத்திரம் மூலம் என்னுடைய திறமைகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை இந்த படம் தந்திருக்கிறது. இதை நான் பெருமையாக சொல்லுவேன்.
வளர்ந்து வரும் பிற மொழி பேசும் கதாநாயகிகளுக்கு, சொந்த குரலில் ‘டப்பிங்’ செய்வதற்கு பெரும்பாலும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை.ஆனால் விஜய் ஆண்டனி சார் என்னை எனது சொந்த குரலிலேயே ‘சைத்தான்’ படத்தில் பேச வைத்திருக்கிறார். இது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது.
வருகிற டிசம்பர் 1-ந் தேதி முதல் இந்த ‘சைத்தான்’ உண்மையான அவதாரத்தை ரசிகர்கள் தெரிந்து கொள்வார்கள்” என்றார்.
Average Rating