திருட போன இடத்தில் அசிங்கப்பட்ட திருடர்கள்: வேடிக்கையான வீடியோ…!!
அவுஸ்திரேலியாவில் உள்ள கடை ஒன்றில் திருட சென்ற திருடர்களை அக்கடை ஊழியர் துணிச்சலாக சாக்லேட்டால் ஓட ஓட விரட்டியடித்த சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.
Cessnock நகரத்தில் உள்ள ஒரு கடையிலயே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
குறித்த வீடியோவில், கடை ஊழியர் ஒருவர் கடைக்குள் இருக்கிறார், அப்போது கருப்பு நிற கார் ஒன்று கடையை நோக்கி வருகிறது.
எதிர்பாராதவிதமாக காரிலிருந்து முகமூடி அணிந்து கையில் ஆயுதங்களுடன் திருடன் ஒருவன் காரிலிருந்து இறங்குகிறான்.
இதைகண்ட ஊழியர் துணிச்சலாக கடையிலிருந்த சாக்லேட்டுகளை எடுத்து திருடர்கள் மீது எறிகிறார். இதைக்கண்டு திருடர்கள் அலறியடித்துக்கொண்டு காரில் ஏறி ஓடுகின்றனர்.
இதனையடுத்து ஊழியர் பொலிசாருக்கு தகவலளிக்க சிறிது தொலைவில் காருடன் குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர்.
எனினும், சாக்லேட்டை கொண்டு திருடர்களை துணிச்சலாக விரட்டிய ஊழியரை பலர் பாராட்டி வருகின்றனர்.
Average Rating