கர்ப்பபையில் நீர்க்கட்டியா? இயற்கையாக சரிசெய்ய வழிமுறைகள் இதோ…!!

Read Time:3 Minute, 58 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-6இன்றைய காலத்தில் அதிகளவாக பெண்கள் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கர்ப்பப்பை நீர்க்கட்டி.

இதனால் மாதவிடாய் கோளாறுகள் ஏற்படுவதுடன், கருவுறுதிலும் பல்வேறு பிரச்சனைகள் உண்டாகின்றது.

சில சமயத்தில் வயிற்று உப்புசம், குடலியக்கத்தின் போது கடுமையான வலி, தசைப்பிடிப்புகள், மாதவிடாய் சுழற்சியின் போது தாங்க முடியாத வலி, உடலுறவின் போது வலி, முதுகு அல்லது தொடைகளில் வலி போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.

இதனை மிக எளிமையான இயற்கையான முறைகளின் மூலம் சரிசெய்யலாம்.

மேலும் எந்தவொரு பக்கவிளைவும் ஏற்படாமல் இருப்பதுடன், விரைவில் நல்ல பலனும் கிடைக்கும்.

கருப்பை நீர்க்கட்டியை கரைக்கும் இயற்கையான வழிகள்

வெதுவெதுப்பாக இருக்கும் சுடுநீரை பாட்டிலில் நிரப்பி, அதை அடிவயிறு மற்றும் இடுப்பு பகுதிகளில் 15 நிமிடம் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இந்த முறையை அடிவயிறு வலி எடுக்கும் போது செய்தால், உடனடி பலன் கிடைக்கும்.

ஒரு துணியில் விளக்கெண்ணெயை நனைத்து அடிவயிற்று பகுதியில் வைத்து, பிளாஸ்டிக் கவர் கொண்டு சுற்றி, மீண்டும் பழைய துணியால் சுற்ற வேண்டும். பின் சுடுநீர் பாட்டில் கொண்டு அடிவயிற்றுப் பகுதியில் 30 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். குறிப்பாக கருத்தரிக்க நினைக்கும் பெண்கள் மற்றும் மாதவிடாய் காலத்தில் உள்ள பெண்கள் இந்த முறையைப் பின்பற்றக்கூடாது.

ஒரு வாளி வெதுவெதுப்பான நீரில் 1 கப் எப்சம் உப்பு சேர்த்து கலந்து, அதனுடன் 10 துளிகள் லாவெண்ட எண்ணெய் சேர்த்து கலக்க வேண்டும், பின் உப்பு கரைந்ததும் நம் உடலை அந்நீரில் 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இப்படி தினமும் ஒரு முறை பின்பற்றினால் கருப்பை நீர்க்கட்டிகள் கரைந்து விடும்.

சீமைச்சாமந்தி டீயை தினமும் 3 கப் குடித்து வர வேண்டும். ஏனெனில் சீமைச் சாமந்தியில் உள்ள உட்பொருட்கள் நீர்க்கட்டிகளை கரைப்பதுடன், அதனால் ஏற்படும் வலியையும் நீக்குகிறது.

1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை, 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் 2 டம்ளர் குடித்து வர வேண்டும். இதனால் நீர்க்கட்டிகள் மறைந்து, வலியும் குறைந்து விடும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யானை போன்று இருக்கிறாய்…குண்டாக இருக்கும் மனைவியை ஒதுக்கிய கணவன்: கிடைத்தது தக்க பதிலடி…!!
Next post நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும் பாகற்காய்…!!