ஒரு ஆண் எந்த வயதில் அழகாக இருக்கிறார்?

Read Time:4 Minute, 6 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-1ஒரு ஆண் எந்த வயதில் அழகாக இருப்பார்? என்று கேள்வி கேட்டால் பதில் கிடைப்பது கஷ்டமான ஒன்றுதான்.

ஏனெனில் அழகு விடயத்தில் பெண்கள் அதிக அக்கறை காட்டும் அளவுக்கு, ஆண்கள் அக்கறை காட்டுவதில்லை. கேட்டால், இயற்கையிலேயே அழகாக பிறப்பெடுத்தவர்கள் என்ற காரணத்தால், செயற்கை அழகு எதுவும் தேவையில்லை என்ற காரணத்தை தான் முன்வைப்பார்கள்.

இருந்தபோதிலும், அழகு விடயத்தில் பெண்களை உற்றுநோக்கும் இந்த உலகம், அந்த அளவுக்கு ஆண்களை உற்றுநோக்குவதில்லை.

ஆண்களுக்காக நடத்தப்படும் அழகு போட்டிகளிலும், உடற்பயிற்சி செய்து கட்டுக்கோப்பான உடல் அமைப்பு பெற்றவர்கள் (சிக்ஸ் பேக்) தான் ஆணழகர்கள் என்ற முதல் காரணத்தை எடுத்துக்கொள்கிறார்கள்.

இப்படி உடற்பயிற்சி செய்து, உடலை ஏற்றினால் மட்டுமே ஆண்கள் அழகு கிடையாது. அவர்கள் ஒவ்வொரு வயதிலும் அடியெடுத்து வைக்கும்போது அவர்களின் அழகு கூடிக்கொண்டே தான் செல்கிறது.

அதிலும், அவர்கள் எந்த வயதில் அழகு என்று பார்த்தால், அது பருவ வயதில்தான். ஒரு ஆணுக்கு முதிர்ச்சி என்பது மிக முக்கியமான ஒன்று.

குறும்புகள் செய்து சிறுவர்களாக இருக்கும் ஆண்கள் 13 முதல் 15 வயதிலான பருவம் அடையும் காலத்தில் தான் இவர்களது உடம்பில் ஹார்மோன் சுரப்பதால் மாற்றங்கள் ஏற்படும்.

உடலமைப்பில் முதிர்ச்சி ஏற்படுவது மட்டுமல்லாமல், தாங்கள் செய்யும் செயல்களிலும் சற்று முன்னோக்கி சிந்திக்க ஆரம்பிக்கிறார்கள்.

இதற்கு அடுத்ததாக, திருமணம் செய்யும் வயது 27 – 30. இந்த வயதில் சாமுத்திரிகா லட்சணத்தின் படி, அவர்களின் உடல் பாகங்கள் நோட்டமிடப்படுகின்றன.

திருமணத்திற்கு தயாராக இருக்கும் இவர்களின் முகத்தில் ஒருவித பூரிப்புடன் சேர்ந்த சாமுத்திரிகா லட்சணம் ஒன்று சேர்ந்துகொள்வதால் மிகவும் அழகாக இருப்பார்கள்.

இதற்கு அடுத்ததாக, குழந்தைக்கு தந்தையாகும் போது, தன்னுடைய குழந்தையை முதற்தடவையாக கைகளில் தூக்கி கொஞ்சும் போது அழகாக இருப்பார்கள்.

அடுத்தபடியாக தன்னுடைய மகன்/மகளை வளர்க்கும் போது, தன்னுடைய குழந்தைகளுக்கு தந்தை தான் ரியல் ஹீரோ என்பதை யாரும் மறக்க முடியாது.

அவர்களுடன் சேர்ந்து விளையாடுவது, அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது, அவர்களது வளர்ச்சியில் துணைநிற்பது, அவர்களுக்காகவே உழைப்பது என அப்போது தான் தன் தந்தைபட்ட கஷ்டத்தையும் நினைத்து பார்ப்பார்கள்.

இதற்கு அடுத்ததாக முதுமை பருவம், மீண்டும் குழந்தையாக மாறும் அந்த பருவத்திலும் தாத்தாக்கள் அழகு தான்!!

*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாயமான ஜே.என்.யு மாணவர்: தகவல் அளிப்போருக்கு ரூ.10 லட்சம்…!!
Next post இதை பார்த்திட்டு சிரிக்காம இருந்தா உடனே டாக்டரை பாருங்க…!! வீடியோ