மூன்றாவது இன்னிங்சுக்கு தயாரான விஷ்ணு விஷால்…!!

Read Time:1 Minute, 53 Second

201611291112193890_vishnu-vishal-ready-to-third-innings_secvpf‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு விஷ்ணு விஷால், முருகானந்தம் இயக்கத்தில் ‘கதாநாயகன்’ என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்த விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தின் கதாசிரியர் செல்லா அய்யாவு இயக்கும் புதிய படத்தை விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்கவிருக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் கதாநாயகனாக விஷ்ணு விஷால் நடிக்க உடன் கருணாகரன், யோகி பாபு, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஷக்தி ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், இப்படத்தின் கதாநாயகி மற்றும் பிற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.

விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது ‘மாவீரன் கிட்டு’ படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சுசீந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார். வருகிற டிசம்பர் 2-ந் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மோட்டார் சைக்கிளில் சாகசம்: ரோட்டில் தவறி விழுந்து 2 மாணவர்கள் பலி…!!
Next post இராணுவப் புரட்சியின் எதிர்வினைகள்…!! கட்டுரை