தினமும் 100 பூனைகளை கொன்ற நபர்! காசுக்காக இப்படி செய்வதா? பலவீனமானவர்கள் படிக்க வேண்டாம்…!!

Read Time:2 Minute, 6 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-1பூனைகளை முயல் என பொய் சொல்லி பல உணவகங்களுக்கு கொடுத்து அதிகளவில் பணம் சம்பாதித்த ஒரு நபரின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சீனாவின் செங்டூ மாகாணத்தில் ஒரு இடத்தில் Huang Pingfu என்னும் நபர் அதிக அளவில் பூனைகளை வளர்ப்பதாகவும், தினம் 100 பூனைகளை கொல்வதாகவும் மிருக பாதுகாப்பு ஆணையத்துக்கு தகவல் வந்துள்ளது.

இதையடுத்து அங்கு சென்று பார்த்த மிருக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

காரணம் அங்கு கூண்டுகளில் பல பூனைகள் உயிருடனும், அதன் அருகில் பல பூனைகள் தோல்கள் உரிக்கப்பட்டு இறந்த நிலையிலும் இருந்துள்ளன.

இதுகுறித்து Huang யிடம் அவர்கள் பூனையை முயல் என விற்பது தவறில்லையா என கேட்டதற்கு அவர் பயப்படாமல் பதிலளித்துள்ளார்.

அவர் கூறுகையில், நான் பூனைகளை உணவகத்துக்கு கடந்து 20 வருடங்களாக விற்று வருகிறேன் என கூறியுள்ளார்.

இதை பற்றி மிருக பாதுகாப்பு ஆணைய தலைவர் கூறுகையில், Huang இப்படி பூனைகளை கொன்று உணவகத்திற்கு தருவதன் மூலம் தினம் 3,000 yuan(S$620) அளவு சம்பாதித்து வருகிறார்.

இங்கிருந்து சுமார் 49 பூனைகளை நாங்கள் உயிருடன் மீட்டு விலங்குகள் சரணாலயத்தில் ஒப்படைத்துள்ளோம் என கூறியுள்ளார்.

சீனாவில் பூனைகளை கொன்று உணவகத்துக்கு விற்பனை செய்ய சட்டப்படி தடையேதும் இல்லாததால் Huang Pingfu மீது பொலிசார் நடவடிக்கை எடுப்பார்களா என்பது புரியாத புதிராகவே உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எரிதணல்…!! கட்டுரை
Next post இரவில் வாழைப்பழம், ஆப்பிள் சாப்பிடாதீங்க! ஏனென்றால்…. இன்னும் பல பயனுள்ள தகவல்களுடன்…!!