ஊனமுற்ற சிறுவன் எழுந்து நடந்த அதிசயம்…!!

Read Time:2 Minute, 24 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-3இளம்பிள்ளைவாதம் நோயால் பிறந்ததிலிருந்தே பாதிக்கப்பட்ட ஊனமுற்ற ஆறு வயது சிறுவன் தான் படிக்கும் பள்ளி வகுப்பறையில் வீல் சேரிலிருந்து எழுந்து நடந்த வீடியோ வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டை சேர்ந்த சிறுவன் David Matos (6) பிறக்கும் போதே போலியோ இளம்பிள்ளைவாத நோய் அவனை தாக்கியதால் அவனால் நடக்க முடியாது, எங்கு போனாலும் வீல் சேரில் தான் போக வேண்டும்.

இந்த நிலையில் அவன் எழுந்து நடக்கும் ஒரு வீடியோ காட்சி இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளது. அதில் சிறுவன் David தன் பள்ளி வகுப்பறையில் வீல் சேரிலிருந்து எழுந்து நடக்க முயல்கிறான்.

அவனை சக வகுப்பு மாணவர்களும், ஆசிரியையும் உன்னால் முடியும் என கைத்தட்டி உற்சாகப்படுத்துகிறார்கள்.

சிறுவன் வகுப்பறையில் உள்ள டேபிளை பிடித்தப்படி நடக்கிறான். பின்னர் மெது மெதுவாக அந்த டேபிளிலிருந்து தன் கையை எடுத்து விட்டு தன்னம்பிக்கையுடன் நடக்கிறான்.

ஊனத்தை வென்று, தன்னம்பிக்கையுடன் நடந்த சிறுவனை அவன் வகுப்பாசிரியை தூக்கி கொண்டு மகிழ்ச்சியில் கட்டி பிடிப்பது போல அந்த வீடியோவில் உள்ளது.

இது குறித்து Davidன் தாய் Roseley Matos கூறுகையில், சிறுவயதிலேயே அவனுக்கு ஏற்பட்ட நோய் தாக்கத்தால் அவனால் இனி நடக்கவே முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

இப்போது அவன் எழுந்து நடக்கும் வீடியோவை பார்த்த பின்னர் என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது.

அவனை ஊக்கபடுத்திய அனைவருக்கும் மற்றும் கடவுளுக்கும் நன்றி என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post என்ன ஒரு பலே ஐடியா? சான்ஸ்சே இல்லைங்க…!! வீடியோ
Next post ஆபத்தான நேரத்திலும் காதல் மனைவிக்கு போன் செய்த வீரர்! சில நிமிடங்களில் உயிர் பிரிந்த துயரம்…!!