உலகின் சில விசித்திரமான உணவுகள்..!!

Read Time:3 Minute, 59 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-8ஒவ்வொரு நாட்டினருக்கும் பாரம்பரிய உணவு என்ற ஒன்று இருக்கும். வெவ்வேறு நாடுகளுக்கு சுற்றுலா சென்றாலும், தங்களின் பாரம்பரிய உணவினை ருசிக்க மறக்கமாட்டார்கள்.

ஆனால், அதே சமயத்தில் சுற்றுலா சென்றுள்ள நாடுகளில் விற்பனை செய்யப்படும் உணவுகளையும் ஒரு கைபார்த்துவிடுவார்கள்.

அதிலும் உணவு விடயத்தில் ஒரு சில நாடுகள் மிகவும் விசித்திரமான முறையில் உணவுகளை தயார் செய்வார்கள்.

இதனை பார்க்கும்போது சாப்பிட மனம் வருகிறதோ, இல்லையோ நிச்சயம் வாந்தி வரும்.

காரணம் தரையில் ஊறும் பூச்சிகள், பாம்புகள், எலிகள் என அனைத்து உயிரினங்களையும் மிகவும் வித்தியாசமான முறையில் சமைப்பார்கள்.

உலகில் வெவ்வேறு நாடுகளில் தயாரிக்கப்படும் சில விசித்திரமான உணவுகள் இதோ,

குளவி (Wasp Crackers)

குளவி கொட்டினால் கைகள் வீங்கிதான் நாம் கேள்விபட்டிருப்போம். ஆனால் ஜப்பான் நாட்டில் இந்த குளவியை வைத்து ஒரு ரெசிப்பியே தயார் செய்து சாப்பிடுகிறார்கள்.

இறந்துபோன குளவிகளை வறுத்தெடுத்து, கோதுமை மாவின் மூலம் பிஸ்கெட் தயார் செய்கிறார்கள்.

எஸ்கிமோ ஐஸ்க்ரீம்

கலைமான் கொழுப்பு, பெர்ரி, மீன் பேஸ்ட் போன்றவற்றை பயன்படுத்தி இந்த ஐஸ்க்ரீம் தயார் செய்யப்படுகிறது.

பட்டுப்புழு

கொரியா நாட்டினர் பட்டுப்பிழுவினை அவியல் செய்து காலை உணவாக சாப்பிடுகிறார்கள். அல்லது வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து ப்ரை செய்து சாப்பிடுகிறார்கள்.

மேலும், சோயாபீன்ஸ் மற்றும் காளான் சேர்த்தும் இந்த பட்டுப்புழு உணவினை தயார் செய்து ருசிக்கிறார்கள்.

வெட்டுக்கிளிகள்

வெட்டுக்கிளிகள் நன்றாக எண்ணெய் விட்டு ப்ரை செய்யப்படுகிறது. சிக்கன் பப்ரை போன்று இந்த வெட்டுக்கிளி உணவு தயார் செய்யப்படுகிறது.

மேலும், இந்த உணவு செரிமானம் அடைவதற்கு இதனுடன் சிறிதளவு எலுமிச்சையும் சேர்த்துக்கொள்ளப்படுகிறது.

சாரைப்பாம்பு ப்ரை

அமெரிக்காவில் இந்த உணவு பிரபலமான ஒன்று. இந்த சாரைப்பாம்பின் கால்களை ப்ரை செய்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

மேலும் இதனை கொதிக்க வைத்து அதன் பின்னர் இதன் மேல் சிறிது உப்பு தடவி ப்ரை செய்து சாப்பிடுவார்கள்.

பன்றியின் ரத்தத்தில் சூப்

வியட்நாமில் இந்த உணவு பிரபலம். நறுக்கப்பட்ட வேர்க்கடலைகள் போட்டு இந்த ரத்த சூப் தயார் செய்யப்படுகிறது.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 400-க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவர முடியாமல் முடங்கி கிடக்கின்றன: நாசர் வேதனை…!!
Next post நாடா சூறாவளியினால் யாழில் 57 குடும்பங்கள் பாதிப்பு! ஒருவர் உயிரிழப்பு…!!