டைட்டானிக் கப்பல் மூழ்கிய கடைசி நிமிடங்கள்: வரலாற்றில் ஒரு கரும்புள்ளி…!! வீடியோ

Read Time:5 Minute, 8 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-1கடல் பயண வரலாற்றில் ஒரு பெரிய கரும்புள்ளியை ஏப்ரல் 14 ஆம் திகதி ஏற்படுத்தியது.

ஏனெனில், 2,240 பயணிகளுடன் பயணித்த டைட்டானிக் என்ற உல்லாச கப்பல் பனிப்பாறையில் மூழ்கியது இந்த நாளில்தான்.

டைட்டானிக் கப்பல் குறித்தும் அது மூழ்கப்பட்ட சம்பவம் குறித்தும் தெரிந்துகொள்ளப்போனால், புதிய சுவாரசியமான தகவல்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றன.

டைட்டானிக் கப்பல் பற்றி சில முக்கிய தகவல்கள் இதோ,

உலகின் முதல் சொகுசுக் கப்பலான டைட்டானிக்கின் பெயர் RMS TITANIC. இங்கிலாந்தின் மிகப்பெரிய கப்பல் நிறுவனமான White Star Line நிறுவனம் இதைக் கட்டியது.

கப்பல் கட்டும் பணி 1909 மார்ச் மாதம் 31 ம் தேதி துவங்கி 1911 மே மாதம் 31 ம் தேதி கட்டி முடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு வருடம் கட்டப்பட்ட இந்தக்கப்பலின் எடை 46,328 டன் ஆகும்.

Southampton நகரில் (இங்கிலாந்து) இருந்து கிளம்பி Cherbourg, France & Queenstown, Ireland வழியாக நியூயார்க் சென்றடைவதாக திட்டமிடப்பட்டது.

இந்த சொகுசுக் கப்பல் முக்கியமாகப் பணக்காரர்களுக்காகவே கட்டப்பட்டது.

இதில் உள்ள ஒரு அடுக்கின் பெயரான Promenade Deck (A Deck) ல் நீச்சல் குளம், சொகுசான உணவருந்தும் இடம், படிக்கும் எழுதும் இடம், உடற்பயிற்சிக் கூடம், விளையாட்டு இடம் மற்றும் புகைபிடிக்கும் இடம் என்று பார்த்துப் பார்த்துக் கட்டப்பட்டது.

கப்பலில் செல்லக் கட்டணம் தோராயமாக மூன்றாம் வகுப்பிற்கு $36 இரண்டாம் வகுப்பிற்கு $66 முதல் வகுப்பிற்கு $125 மற்றும் டீலக்ஸ் வகுப்பிற்கு $4500 ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. (அதாவது நூறு வருடங்களுக்கு முன்பு).

டைட்டானிக் பயணம்

1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் திகதி Southampton நகரில் (இங்கிலாந்து) இருந்து கிளம்பி Cherbourg, France & Queenstown, Ireland வழியாக நியூயார்க் சென்றடைவதாக திட்டமிடப்பட்டது.

பலதரப்பட்ட மக்களின் ஆரவாரம், குதூகலம், கிண்டல், கேலி என்று கப்பல் முழுவதும் உற்சாகம் மண்டிக்கிடந்தது.

இந்தநிலையில் தான் டைட்டானிக் செல்லும் வழித்தடத்தில் பனிப்பாறைகள் இருந்ததை பிற கப்பல்கள் அறிந்தன.

இதனைத் தொடர்ந்து அமெரிக்கா எனும் கப்பலில் இருந்து இதுகுறித்த சமிக்ஞைகள் அனுப்பப்பட்டன. ஆனால் டைட்டானிக்கிற்கு இது சென்றடையவில்லை.

இரவு 11.40க்கு பெரும் பனிப்பாறையை குறுகிய தூரத்தில் கண்ட சிப்பந்திகள் டைட்டானிக்கை திருப்ப முயன்றனர்.

ஆனால் முடியவில்லை. கப்பலில் பக்கவாட்டை பனிப்பாறைகள் கிழித்ததும் கடல்நீர் சீறிக்கொண்டு உள்ளே புகுந்தது.

ஏப்ரல் 14 இரவு 11 : 40 மணிக்கு டைட்டானிக் 220 அடி நீள பனிப்பாறையில் மோதி மூழ்கத் தொடங்கி ஏப்ரல் 15 விடியற்காலை 2 : 20 மணிக்கு முற்றிலுமாக 12,415 அடி ஆழத்தில் (3,784 மீட்டர்) மூழ்கியது.

விபத்து நடந்தவுடன் உதவி கோரிய போது அருகில் இருந்தது கப்பல் RMS Carpathia ஆகும், தூரம் சுமார் 93 கிலோ மீட்டர்.

இது வர 4 மணி நேரம் ஆகும் என்று கணக்கிடப்பட்டது. RMS Carpathia சரியாக 4 : 10 மணிக்கு டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்திற்கு வந்து படகில் பிழைத்தவர்களை காப்பாற்றியது.

படகில் இருந்தவர்கள் ஒரு சிலர் குளிர் தாங்காமல் இறந்து விட்டார்கள். இந்த விபத்தில் மொத்தமாக 1,514 பேர் இறந்து விட்டார்கள் பணியாளர்களுடன் சேர்த்து 710 பேர் உயிர் பிழைத்தார்கள்.

கேப்டன் Edward John Smith இருப்பதிலேயே மிகுந்த அனுபவம் பெற்றவராக விளங்கி இருந்தார்.

இவருக்கு இங்கிலாந்தில் சிலை வைக்கப்பட்டு கவுரப்படுத்தப்பட்டுள்ளது.

10 ஏப்ரல் 1912 அன்று புறப்பட்டு 15 ஏப்ரல் 1912 மூழ்கிய டைட்டானிக் மொத்தமாக பயணம் செய்தது நான்கு நாட்கள் மட்டுமே!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருச்சி அருகே படுபயங்கர தீவிபத்து! 10 பேர் உடல் சிதறி பலியான பரிதாபம்…!!
Next post நீங்கள் ஆரோக்கியமாக தான் இருக்கிறீர்களா? இதை வைத்து தெரிந்து கொள்ளலாம்…!!