உயிர் போகும் அளவு கடுமையான வலிக்கு தீர்வு சில நிமிடங்களில்…!!

Read Time:4 Minute, 12 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-4நாம் இந்த நவீன உலகத்தில் பல்வேறு நோய்களுக்கு நாள்தோறும் ஆட்பட்டு வருகிறோம். அதற்கு தீர்வு கொடுக்கும் என நம்பி எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளும் உயிரை பறிக்கும் அரக்கனாக சில வேளைகளில் மாறி விடுகின்றது.

எளிய முறையில் இயற்கையாக தீர்க்கக்கூடிய நோய்களை பணம் செலவழித்து மருந்து எடுத்து நோயை இன்னும் பெரியதாக்கிக் கொள்கிறோம் அல்லது வேறு நோய்களை தேடிக்கொள்கிறோம்.

அந்த வகையில் ஒன்று தான் பல்வலி.

பல்வலி வந்தவுடன் வலி நிவாரணி மாத்திரைகளை நாடுபவர்கள் நம்மில் பலர்.

ஆனால் அதிகமாக பயன்படுத்தும் வலி நிவாரணி மாத்திரைகளால் எதிர்காலத்தில் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் வாய்ப்புகள் அதிகம்.

தாங்க முடியாத அளவு வேதனையை தரும் இந்த பல்வலிக்கு பல மருந்து மாத்திரைகள் காணப்பட்டாலும் கூட அதனை வீட்டிலேயே தீர்த்துக்கொள்ள முடியும்.

இயற்கையான முறையில் சில நிமிங்களிலேயே தீர்வு கிடைத்து விடும்.

முதலில் வலியை உணரும் பல்லில் சக்கரையை வைத்து விட்டு, சிறிதளவு மிளகு(18) எடுத்து தூளாக்கி, அதனை கால் டம்ளர் நீரில் விட்டு சுடவைக்க வேண்டும்.

சுடவைத்த நீரினை விரல் சூடு தாங்கும் அளவிற்கு ஆறவிட்டு அதனை வலிக்கும் பல் இருக்கும் பகுதியில் வெளியே கன்னத்தில் அந்த நீரால் தோய்க்க வேண்டும்.

பல் வலி உள்ள போது இதனை செய்து வந்தால் பல்வலி சில நிமிடங்களில் மறைந்து விடும்.

பக்கவிளைவு இன்றி சிறந்த முறையில் உடனடியாக இயற்கையான வழியில் தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியும்.

இதே போன்று இன்னும் பல எளிய இயற்கை முறைகள் உள்ளன.

வீக்கத்துடன் பல்வலி ஏற்பட்டால் ஐஸ் கட்டியை பருத்தி துணியில் சுற்றி வலி உள்ள இடத்தில் வைத்தால் வீக்கம் குறைவதோடு பல் வலியும் குறையும்.

தினமும் காலையில் நித்திரையிலிருந்து எழுந்தவுடன் நல்லெண்ணையை வாயிலெடுத்து கொப்பளித்து துப்பிவிடவேண்டும். அவ்வாறு செய்து வருவதன் மூலம் வாயில் ஏற்படும் பிரச்சினைகள் வராது தவிர்த்துக்கொள்ள முடியும்.

இஞ்சிச் சாற்றை லேசாக சூடுபடுத்தி வாயிலிட்டு கொப்பளித்துவர பல்வலி குறையும்.
வீட்டில் கொய்யா மரம் இருந்தால் இரண்டு இலைகளைப் பறித்து வாயில் போட்டு மென்று, அதன் சாற்றை வாயில் சில நிமிடங்கள் வைத்திருந்து பின் நீக்கிவிட வேண்டும்.

இரண்டு கராம்புகளை பல் வலி உள்ள இடத்தில் வைத்து சிறிது நேரம் கடித்திருந்தால் பல் வலி குறைந்துவிடும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திண்டுக்கல்லில் பரபரப்பு: அரசு பஸ் கண்ணாடி கல்வீசி உடைப்பு…!!
Next post ஃபிடல் காஸ்ட்ரோ: வரலாற்றின் விடுதலை…!! கட்டுரை