நீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா?… அப்போ உங்களுக்கு இந்த நோய் வராதாம்…!!
நாள்தோறும் முட்டை சாப்பிடுவதன் மூலமாக, மாரடைப்பு அபாயத்தை தவிர்க்க முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக, அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் விரிவான ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர். இதற்காக, கடந்த 1982ம் ஆண்டு தொடங்கி, 2015ம் ஆண்டு வரையான பல்வேறு மாரடைப்பு நோயாளிகளின் விவரங்களையும் ஆய்வு செய்யப்பட்டது. 2,76,000 பேரிடம் இதய நோய்கள் சம்பந்தமாகவும், 3,08,000 பேரிடம் மாரடைப்பு சம்பந்தமாகவும் விவரம் சேகரிக்கப்பட்டது.
தன்முடிவாக, முட்டை அதிகம் சாப்பிடுவோருக்கு மாரடைப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முட்டையில் உள்ள வைட்டமின்கள், புரதச்சத்து போன்றவை, மன அழுத்தம், இதய வீக்கம் போன்றவற்றை சரிசெய்ய உதவுகின்றன.
இதையடுத்து, மாடைப்பு நோயும் குறைந்துவிடுவதாக, அந்த பேராசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். முட்டை மற்றும் மீன் கலந்த உணவு, உடலுக்குப் போதிய பலம் அளிப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
Average Rating