9 நாட்களாக குழந்தைகளை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு காதலனுடன் இருந்த தாய்: துடி துடிக்க இறந்த குழந்தை…!!

Read Time:3 Minute, 46 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-1உக்கிரைனில் இரண்டு குழந்தைகளை 9 நாட்களாக வீட்டு அறையில் பூட்டி வைத்து விட்டு தாய் வெளியே சென்றதால் உணவின்றி ஒரு குழந்தை பரிதாபமாக இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்கிரைன் நாட்டின் Kiev தலைநகரைச் சேர்ந்தவர் Vladislava Podchapko( 20). இவர் அங்குள்ள பகுதியில் தன் காதலருடன் கடந்த ஒன்பது நாட்களாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் தன் குழந்தைகளான Daniil மற்றும் Anna வை தன்னுடைய வீட்டில் பூட்டி வைத்து விட்டு, அவர்கள் சாப்பிடுவதற்கு சிறிதளவு இனிப்பு வகை உணவுப்பொருட்கள் மற்றும் நொறுக்கு தீனிகள் போன்றவற்றை வைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் அவர் வீடு திரும்புகையில் Daniil 23 மாத குழந்தை பரிதாபமாக உணவின்றி இறந்துள்ளார். மற்றொரு குழந்தையான Anna வை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அக்குழந்தையும் அபாயகட்டத்தில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பொலிசார் அங்கு சென்று சோதனை செய்ததில் சில உணர்ச்சிபூர்வமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அதில் குழந்தைகள் தங்களுடைய கை வண்ணத்தை அறையின் சுவற்றில் வரைந்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து குழந்தைகள் தொடர்ந்து அழுதுள்ளனர். ஆனால் அருகில் இருந்த யாரும் இது தொடர்பாக எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை. குழந்தைகள் கதவுகளை உடைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அது பலன் அளிக்கவில்லை.

தங்களால் முடிந்த அளவுக்கு அனைத்து முயற்சிகளையும் செய்துள்ளனர். ஆனால் எதுவும் பலன் அளிக்கவில்லை. அவர்கள் கடந்த ஆறு நாட்களாக அவர் தாயார் வைத்துச் சென்ற நொறுக்குத் தீனி உணவுப் பொருட்களை சாப்பிட்டு இருந்துள்ளனர்.

அதன் பின்னரே அவர்களுக்கு உணவு கிடைக்காமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து அவர் தாயார் கூறுகையில், தன் குழந்தை இறக்கும் என்று தான் எதிர்பார்க்க வில்லை என கூறியுள்ளார். குழந்தையை கவனிக்காமல் தன் காதலனுடன் சுற்றித் திரிந்ததால் பொலிசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அவருக்கு இது தொடர்பாக எட்டு வருடங்கள் சிறை தண்டனை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இவருக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்றுள்ளது என்றும் தற்போது புதிதாக ஒரு காதலனுடன் சுற்றித்திரிந்துள்ளதாகவும், கற்பமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் அவருடைய முதல் கணவர் தொடர்பான தகவல்கள் இன்னும் சரிவரத் தெரியவில்லை என்றும் முழு விசாரணையின் பின்னரே தெரியவரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜேர்மனியில் இளம் பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!
Next post லண்டனில் ரூ.75 லட்சம் மதிப்பிலான மோட்டார் சைக்கிள் திருட்டு: தடுக்க முயன்றவருக்கு கொலை மிரட்டல்…!!