இந்த அறிகுறிகளை அலட்சியபடுத்தாதீர்கள்: இதய நோயாக கூட இருக்கலாம்…!!

Read Time:3 Minute, 30 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-4மனிதனுக்கு உள்ள உடலுறுப்புகளில் மிக முக்கியமானது இதயம் ஆகும். இன்றைய நவீன உலகில் வயது வித்தியாசமின்றி பலருக்கும் இதயம் சம்மந்தமான நோய்கள் வருகிறது.

இருதய நோய்களின் முக்கிய அறிகுறிகள்:

நெஞ்சு வலி

இதய நோயின் முக்கிய அறுகுறியே நெஞ்சு வலி தான். மார்ப்பின் இட பகுதியில் தாங்கமுடியாத அளவு ஒரு பாரமான வலி ஏற்ப்பட்டால் அது மாரடைப்பாக கூட இருக்கலாம். நெஞ்சின் அருகே வலி பலருக்கு அஜீரணரண கோளாரால் கூட உண்டாகும். தாங்க முடியாமல் இந்த வலி இருந்தால் மருத்துவரிடம் சென்று விடுவது நன்மை பெயர்க்கும்.

மூச்சுத்திணறல்

நன்றாக மூச்சு விட்டு கொண்டு இருப்பவர்களுக்கு, திடீரென மூச்சு விட கடும் சிரமமாக இருந்தால் அது கூட இதய நோயின் அறிகுறியாக இருக்காலாம். இப்படி ஆகும் பட்சத்தில் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

உடல் சோர்வு/ மயக்கம்

காரணமில்லால் உடல் சோர்வடைந்தாலோ அல்லது தலை சுற்றி மயக்கம் ஏற்படுவது போல உணர்ந்தாலோ இதயத்துக்கு போக கூடிய ரத்தத்தில் ஏதோ கோளாறு இருப்பதாக அர்த்தமாகும்.

வேறு இடங்களில் வலி

இதய நோய் உண்டாக்கும் மாரடைப்பின் வலி சரியாக நெஞ்சு பகுதியில் தான் ஏற்ப்படும் என அர்த்தமில்லை. இடது தோள் பட்டையிலோ அல்லது இடது புற முதுகிலோ தாங்க முடியாத வலி ஏற்ப்பட்டால் கூட அது நெஞ்சு வலியின் அறிகுறியாக இருக்கலாம்.

அதிக வியர்வை

வழக்கத்தை விட அதிக அளவு வியர்வை உடலிலிருந்து அதும் காற்றோட்டமான இடத்தில் இருந்தால் கூட வந்தால் அது நிச்சயம் மாரடைப்புக்கான அறிகுறி தான். அதே போல இதய படபடப்பும் கூட இதன் முக்கிய அறிகுறியாகும்.

உடல் தளர்வு

ஒருவரின் உடல் எடை காரணமில்லாமல் குறைந்து உடம்பு மெலிந்து கொண்டே போனாலோ முகம் பொலிவிழந்து காணப்பட்டு, வயதான தோற்றத்தைக் கொடுத்தாலோ அது கூட இதய நோய் வருவதற்கான அறிகுறிகள் தான் என்பதை மறவாதீர்கள்.

மருத்துவர்கள் ஆலோசனைபடி, சரியான உணவு பழக்கமும், உடற்பயிற்சியும் மேற்கொண்டால் இதய நோய் வராமல் பார்த்து கொள்ள முடியும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிரியாவின் நிலைமையை உருகி டுவிட் செய்த 7 வயது சிறுமி என்ன ஆனார் தெரியுமா?
Next post சீர்காழி அருகே கார் மோதி பெண் குழந்தை பலி…!!