பிஸ்தா சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்…!!
நட்ஸ் வகைகளில் மிக முக்கியமானது பிஸ்தா, நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் பிஸ்தாவில் ஏராளமாக நிறைந்துள்ளது.
நல்ல கொழுப்புக்கள், புரோட்டீன்கள் மற்றும் கனிமச்சத்துக்கள், காப்பர், பொட்டாசியம், இரும்புச்சத்து, மக்னீசியம், செலினியம், இரும்புச்சத்து, நார்ச்சத்துக்கள், பீட்டா-கரோட்டீன், ஜிங்க் மற்றும் விட்டமின்கள் போன்ற சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது.
எனவே இந்த பிஸ்தாவை நாம் தினமும் சிறிதளவு சேர்த்துக் கொண்டு வந்தால், நம் உடலைத் தாக்கும் பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
பிஸ்தாவில் கிடைக்கும் நன்மைகள்
பிஸ்தா இதயத்தின் ஆரோக்கியத்தை சீராகப் பராமரிக்க உதவுகிறது. எனவே தினமும் சிறிது பிஸ்தாவை சாப்பிட்டு வந்தால், நமது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைந்து, இதய நோயின் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
பிஸ்தாவில் நார்ச்சத்து அதிகமாகவும், சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் குறைவாகவும் உள்ளது. எனவே எடையைக் குறைக்க விரும்புபவர்கள், இதை தினமும் சாப்பிட்டு வர, விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
பிஸ்தாவில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கண்களில் உள்ள திசுக்களுக்கு நல்ல பாதுகாப்பு வழங்கி, கண் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. மேலும் வயதான காலத்தில் ஏற்படும் மாகுலர் திசு செயலிழப்பு பிரச்சனையையும் தடுக்கிறது.
பிஸ்தாவை தினமும் சாப்பிட்டு வந்தால், நமது உடலில் விட்டமின்களின் அளவை அதிகரித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமை மேம்படுத்துகிறது. இதனால் நமது உடம்பில் உள்ள கிருமிகளை அழித்து, ரத்த வெள்ளையணுக்களின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.
தினமும் சிறிதளவு பிஸ்தா சாப்பிட்டு வருவதால், நமது உடலில் ஏற்படும் ரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏதும் வராமல் தடுத்து, ஹீமோகுளோபின்களின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
பிஸ்தாவில் இருக்கும் அமினோ அமிலங்கள் உள்ளது. எனவே இந்த பிஸ்தா நீரிழிவு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எதுவும் வராமல் நமது உடலை ஆரோக்கியமாக பாதுகாக்கிறது.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
Average Rating