மலச்சிக்கல் பிரச்னையா? சிறந்த தீர்வு ஆலிவ் ஆயில்…!!
ஆலிவ் ஆயிலில் சமையல் செய்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று உடல்நல நிபுணர்கள் கூறுவதை கேட்டிருப்பீர்கள். இதற்கு ஆலிவ் ஆயிலில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருப்பது தான். அதுமட்டுமின்றி, இதில் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், வைட்டமின் ஈ மற்றும் கே போன்றவையும் உள்ளது.
இத்தகைய ஆலிவ் ஆயில் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்தும் உடனடி நிவாரணம் வழங்கும் என்பது தெரியுமா?
மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள்:
உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பது, மன அழுத்தம், உணவில் போதிய நார்ச்சத்து இல்லாமை, மோசமான உணவுப் பழக்கங்கள், மிகுந்த காரம் மற்றும் எண்ணெய் உணவுகள் போன்றவைகள் தான் மலச்சிக்கலுக்கு காரணம்.
வழி #1
தயிருடன் ஆலிவ் ஆயில் சேர்த்து பயன்படுத்துவது. தயிரில் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளது. இது குடலில் பாக்டீரியாக்களை அதிகரித்து செரிமானத்தை சீராக்கும். ஆலிவ் ஆயிலில் உள்ள மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் குடலியக்கத்தை மேம்படுத்தும்.
பயன்படுத்தும் முறை:
1 சிறிய கப் தயிருடன் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, ஒரு நாளைக்கு 2 முறை உட்கொள்ள வேண்டும்.
வழி #2
எலுமிச்சையில் அமிலம் அதிகம் உள்ளது. ஆலிவ் ஆயிலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக உள்ளது. இந்த இரண்டையும் ஒன்றாக எடுக்கும் போது, குடல் வறட்சியடைவது தடுக்கப்பட்டு, குடலியக்கம் சீராக நடைபெறும்.
பயன்படுத்தும் முறை: 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் 1 டீஸ்பூன் ஆவில் ஆயில் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் குடிக்க வேண்டும்.
வழி #3
அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுமாயின், காலையில் வெறும் வயிற்றிலும், இரவில் படுக்கும் முன்னும் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலைக் குடியுங்கள். இதனால் மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
Average Rating