அன்னப்பறவையினால் 3.2 கி.மீ தூரம் மெதுவாக நகர்ந்த ரயில்..!! (வீடியோ இணைப்பு)

Read Time:2 Minute, 3 Second

21838swann-e1484653653857அன்­னப்­ப­றவை ஒன்­றினால் ரயி­லொன்றின் பயணம் தாம­த­மான சம்­பவம் பிரிட்­டனில் இடம்­பெற்­றுள்­ளது.

சௌத் வெஸ்ட் ட்ரெய்ன் நிறு­வ­னத்தின் ரயி­லொன்று டெடிங்டன் நக­ரி­லி­ருந்து லண்டனை நகரை நோக்கி புறப்­பட்­டது.

இந்த ரயில் பய­ணித்த தண்­ட­வா­ளத்தில் அன்­னப்­ப­ற­வை­யொன்று நடந்து சென்­றது. அப்ப­ற­வையின் மீது மோது­வதை தவிர்ப்­ப­தற்­காக ரயிலை சாரதி மெது­வாக இயக்கினார்.

இதனால் மணித்­தி­யா­லத்­துக்கு சுமார் 3.2 கிலோ­மீற்றர் (2 மைல்) வேகத்தில் சுமார் 3 கிலோ­மீற்றர் தூரம் ரயில் ஊர்ந்து சென்­றது.

லண்டன் கிங்ஸ்டன் ரயில் நிலை­யத்தை இந்த ரயில் அடைந்­த­போது ரயி­லுக்கு முன்னால் ஒரு மீற்றர் தூரத்தில் அன்­னப்­ப­றவை நடந்து கொண்­டி­ருந்­ததை சிலர் படம்பி­டித்­துள்­ளனர்.

23 வய­தான டேன் பில்­லிங்ஷர்ஸ்ட் என்­பவர் இது தொடர்­பாக கூறு­கையில், ரயில் பய­ணிகள் பலர் லண்­ட­னுக்கு வேலைக்குச் சென்­று­கொண்­டி­ருந்­தனர்.

ரயில் மெது­வாக சென்­றதால் அவர்­களில் பலர் பெரும் விச­ன­ம­டைந்­தனர் எனத் தெரி­வித்தார்.

இந்த ரயிலில் பயணம் செய்த 20 வய­தான யுவதி ஒருவர் இது குறித்து கூறு­கையில், ரயில் மெது­வாக நகர்­வது குறித்து பய­ணிகள் பலரும் எரிச்­ச­ல­டைந்­தனர்.

ஆனால், இதற்­கான கார­ணத்தை அறிந்­த­வுடன் ஒருவருக்கொருவர் இது குறித்து பேசி சிரித்துக் கொண்டிருந்தனர் எனத் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post என் மகன்களின் தலையை வெட்டுவேன்: ஷாருக்கான் ஆவேசம்..!!
Next post முதுமை தோற்றம் சீக்கிரம் வர இதுதான் காரணம்?..!!