32 வயது பெண்ணின் மேல் 26 வயது இளைஞருக்கு ஏற்பட்ட கள்ளக்காதல்..!!

Read Time:3 Minute, 52 Second

lover_sucide_001.w245கேரளாவில் கள்ளக்காதல் ஜோடி தாங்கள் தற்கொலை செய்து கொள்வதை கேமிராவில் ரெக்கார்ட் செய்தபடி உயிரரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநில பத்தனம்திட்டா மாவட்டம் அடூர், கொடுமண் பகுதியை சேர்ந்த ஜோஸ் என்பவரின் மகன் ரிஜோ ஜோஸ். 26 வயதான இவர் ஸ்டில் போட்டோகிராபராக பணிபுரிந்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் பேபி என்பவரின் மகள் ஷினு. இவருக்கு வயது 32. இவரது கணவர் அனு அபிரகாம் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் மாரடைப்பால் இறந்துவிட்டார்.

இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. இந்தநிலையில் ஷினு தன்னுடைய தங்கை ஷைனி வீட்டில் வசித்து வந்தார். இந்தசமயத்தில் ரிஜோ மற்றும் ஷினுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக் காதலானதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் ரிஜோ வீட்டினருக்கு தெரியவந்தது. ரிஜோவின் பெற்றோர் கண்டித்ததால் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ரிஜோ கடந்த 6 மாதமாக அடூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்தார்.

இந்த நிலையில் அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நபர் ஒருவர் அவரது காரை எடுக்க ஷெட்டிற்கு வந்தார். அப்போது காரின் பின்புறம் ரிஜோவின் கார் நிறுத்தப்பட்டிருந்தது. அதையடுத்து ராஜின் காரை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டதால், ரிஜோவை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது செல்போன் சுவிட்ஸ் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து அந்த நபர், ரிஜோவின் வீட்டுக்கு சென்று கதவை தட்டினார். நீண்ட நேரம் ஆகியும் யாரும் வெளியே வரவில்லை. பின்னர் ஜன்னல் வழியாக பார்த்தபோது படுக்கை அறையில் ரிஜோ தூங்கில் தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து உடனடியாக அவர் அடூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஒரு அறையில் ரிஜோவும் அடுத்த அறையில் ஷினுவும் தூக்கில் தொங்கி கொண்டிருந்தனர்.

ரிஜோவின் அறையில் வீடியோ காமிரா ஆன் செய்யப்பட்ட நிலையில் இருந்தது. அதுபோல் ஷினுவின் அறையில் செல்போன் காமிரா ஆன் செய்யப்பட்டிருந்தது. கள்ளக்காதல் ஜோடி தாங்கள் தற்கொலை செய்ததை படம்பிடிக்கும் நோக்குடன் கேமராவை ஆன் செய்து வைத்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

போலீசார் கேமராவை பரிசோதித்தபோது கழுத்தில் சுருக்குமாட்டுவது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதுமையில் கூன் விழுவதற்கு காரணம் என்ன?..!!
Next post சவுதி அரேபிய இளவரசரின் 80 பருந்துகள் விமானத்தில் பயணம்..!!