சவுதி அரேபிய இளவரசரின் 80 பருந்துகள் விமானத்தில் பயணம்..!!

Read Time:1 Minute, 51 Second

201702011030455212_Saudi-Arabian-prince-plane-trip-of-80-hawks_SECVPFசவுதி அரேபிய இளவரசரின் 80 பருந்துகள் பயணிகள் விமானத்தில் பயணம் செய்தன. பருந்துகள் விமானத்தில் பயணம் செய்யும் வீடியோ ‘ரெட்டிட்’ இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

பயணிகள் விமானத்தில் ஆட்கள் மட்டுமே பயணம் செய்ய முடியும். பறவைகள், விலங்குகள் பயணம் செய்ய அனுமதி இல்லை. ஆனால் சவுதி அரேபியா இளவரசர் ஒருவரின் 80 பருந்துகள் விமானத்தில் ஆட்களுடன் பயணம் செய்தன.

பருந்து ஐக்கிய அரபு நாடுகளின் தேசிய பறவையாக உள்ளது. எனவே அது அங்கு போற்றி பாதுகாக்கப்படுகிறது. ஐக்கிய அரபு நாடுகளுக்கு விமானத்தில் பயணம் செய்ய பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன் மூலம் அவை பக்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, பாகிஸ்தான், மொராக்கோ மற்றும் சிரியாவுக்கு விமானத்தில் பயணம் செய்ய முடியும்.

அந்த வகையில் சவுதி அரேபியா இளவரசரின் 80 பருந்துகள் விமான பயணிகளுடன் அமர்ந்து இருந்தன. அவற்றின் கண்கள் கட்டப்பட்டிருந்தன. பாதுகாப்பு கருதி அவை இருக்கைகளின் கீழ் பகுதியில் கட்டப்பட்டிருந்தன.

பருந்துகள் விமானத்தில் பயணம் செய்யும் வீடியோ ‘ரெட்டிட்’ இணைய தளத்தில் பிரசுரமாகி வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோவை தனது விமானி நண்பர் வழங்கியதாக அதை வெளியிட்டவர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 32 வயது பெண்ணின் மேல் 26 வயது இளைஞருக்கு ஏற்பட்ட கள்ளக்காதல்..!!
Next post கணவன் – மனைவி உறவில் தினமும் தீண்டுதல் இருக்க வேண்டியதன் அவசியம் என்ன?