கணவன் – மனைவி உறவில் தினமும் தீண்டுதல் இருக்க வேண்டியதன் அவசியம் என்ன?

Read Time:3 Minute, 13 Second

Capture-230-450x296தினமும் கணவன் – மனைவி உறவில் தீண்டுதல் இருக்க வேண்டியதன் அவசியம் என்ன என்பது பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது!

தீண்டாமை ஒரு பாவச்செயல்… ஜாதி, மதத்தில் மட்டுமில்ல, உறவுகளிலும் கூட. மனதில் உண்டான தீக்காயங்களுக்கு தீண்டுதல் தான் ஒரு அருமருந்து. கணவன் – மனைவி உறவில் தீண்டல் அன்றாட வாழ்வியலில் ஒன்றாக கலந்திருக்க வேண்டியது அவசியம். இல்லறத்தின் ஆரம்பத்தில் இருந்த அன்பு, காதல், 30 வயதுக்கு மேல் காணாமல் போவதற்கும் தீண்டாமை தான் காரணம். உடலுறவு மட்டுமே இன்பதை அளித்துவிடாது, சில அன்பு கலந்து தீண்டுதல்கள் இருக்க வேண்டும். அதில் அரவணைப்பு சற்றே கூடுதலாக இருக்க வேண்டும்…

காரணம் #1 நீங்கள் 100 முறை ஐ லவ் யூ மெசேஜ் அனுப்புவதற்கும், ஒரு முறை மென்மையாய் தீண்டி அரவணைப்பதும் சமம் தான். கணவன் – மனைவி உறவில் பந்தத்தை, இருவர் மத்தியிலான பாலத்தை பலப்படுத்துவது இந்த தீண்டல் தான். அரவணைப்பு கூடிய ஒரு மெல்லிய தீண்டல் தான் காதலின் அஸ்திவாரம்.

காரணம் #2 பல கருத்துகணிப்புகளில், அடிக்கடி துணையை தீண்டிடாத உறவுகளில் தான் அதிகம் சண்டை சச்சரவுகள் ஏற்படுகின்றன என கண்டறியப்பட்டுள்ளது.

காரணம் #3 தீண்டுதல் மூலமாக தான் நீங்கள் உங்களது உணர்ச்சியை உங்கள் துணையிடம் வெளிக்காட்ட முடியும். இதை விட வேறு எளிய வழி இருக்கிறதா என்ன?

காரணம் #4 கட்டியணைப்பதை காட்டிலும் உங்கள் அன்பை, உங்கள் காதலை வேறு எவ்வழியில் காட்டிவிட முடியும். இது கணவன் – மனைவி இருவரும் உறவை இலகுவாக உணரவும், ஒருவர் மீது ஒருவர் அதிக காதல் கொள்ளவும் காரணமாக இருக்கிறது.

காரணம் #5 தீண்டுதல்கள் தான் மனதில் உண்டான காயங்களை குணப்படுத்த உதவும் சிறந்த மருந்து. இது இதயத்தில் உண்டான காயங்களை உடனே சரிசெய்யும்.

காரணம் #6 உறவில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க, புரிதல் உண்டாக, இருவர் உணர்வு ரீதியான இணைப்பு உண்டாக தீண்டுதல்கள் உதவுகின்றன. உங்கள் உணர்ச்சி மேலோங்கி, உங்கள் இருவருக்குள்ளன உலகை அழகாக்குவது இந்த தீண்டுதல்கள் தான்.

காரணம் #7 மனதில் ஏற்பட்ட காயங்களை மட்டுமல்ல, கணவன் – மனைவி மத்தியிலான சண்டைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு சிறந்த கருவி இந்த தீண்டுதல். இது மனதை ஒரே நொடியில் மாற்றிவிடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சவுதி அரேபிய இளவரசரின் 80 பருந்துகள் விமானத்தில் பயணம்..!!
Next post கண்கள் அடிக்கடி சிவந்து போவதற்கு காரணம்..!!