இரவில் படுக்கும் முன் சாக்ஸில் எலுமிச்சை தோலை வைப்பதால் ஏற்படும் அதிசயம்..!!

Read Time:3 Minute, 36 Second

downloadபலரும் தங்கள் பாதங்களுக்கு அதிக அக்கறை காட்டமாட்டார்கள். இதனால் பாதங்களில் அசிங்கமாக வெடிப்புக்களை சந்திக்க நேரிடுகிறது. அதுமட்டுமின்றி, சில சமயங்களில் குதிகால்களில் ஆணிகளும் வருகின்றன. இந்த ஆணிகள் கடுமையான வலியையும் ஏற்படுத்தும். இதனைப் போக்குவதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன. இங்கு அதில் சில சக்தி வாய்ந்த இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை தொடர்ச்சியாக பின்பற்றி வந்தால், நிச்சயம் கால்களில் உள்ள வெடிப்புக்கள் மற்றும் ஆணிகள் போய், பாதங்கள் மென்மையாகவும் அழகாகவும் இருக்கும்.

எலுமிச்சை தோல் எலுமிச்சையை இரண்டாக வெட்டி, சாற்றினை எடுத்துவிட்டு, அதன் தோலை இரவில் படுக்கும் முன், குதிகால்களில் வைத்து, சாக்ஸை போட்டு வர வேண்டும். இப்படி தொடர்ந்து 10 நாட்கள் செய்து வந்தால், குதிகால் வெடிப்புக்கள் மட்டுமின்றி, ஆணிகளும் தான் போய்விடும்.

விளக்கெண்ணெய் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் 1 கப் ஆப்பிள் சீடர் வினிகரை வெதுவெதுப்பான நீரில் சரிசம அளவில் கலந்து, அக்கலவையினுள் 15 நிமிடம் பாதங்களை ஊற வைத்து, பின் மெருகேற்ற உதவும் கல்லைக் கொண்டு தேய்த்து நீரில் கழுவி விட்டு, பின் விளக்கெண்ணெயைத் தடவுங்கள். இப்படி 10 நாட்கள் தொடர்ந்து செய்து வர, பாதங்களில் உள்ள பிரச்சனைகள் நீங்கும்.

வெங்காயம் வெங்காயத்தை துண்டுகளாக்கி, அதில் வினிகரை ஊற்றி பகல் முழுவதும் ஊற வைத்து, இரவில் படுக்கும் முன், அந்த வெங்காயத்தை ஆணி உள்ள இடத்திலோ, குதிகால் வெடிப்பு உள்ள இடத்திலோ வைத்து, சாக்ஸ் அணிந்து உறங்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், விரைவில் பாதங்களில் இருக்கும் பிரச்சனைகள் போகும்.

பிரட் பாழாகி போன பிரட்டை ஆப்பிள் சீடர் வினிகரில் நனைத்து, பின் அதனை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி வர, பாதங்களில் உள்ள பிரச்சனைகள் அகலும்.

பேக்கிங் சோடா மற்றும் சுடுநீர் பேக்கிங் சோடா பல பிரச்சனைகளைப் போக்கவல்லது. பாதங்களில் உள்ள குதிகால் வெடிப்பைப் போக்க, 3 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீரில் போட்டு, அந்நீரில் கால்களை ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ, பாதங்கள் மென்மையாகும்.

அன்னாசி தினமும் இரவில் படுக்கும் முன், அன்னாசியை குதிகால் வெடிப்பு பகுதியில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து வர, விரைவில் வெடிப்புகள் மறையும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலும் நம்ம ஹீரோயின்களும்..!!
Next post அமெரிக்க போர் கப்பலை நெருங்கிய ரஷ்ய போர் விமானங்கள்..!! (வீடியோ)