கூகுளில் வேலை கேட்டு கடிதம் எழுதிய 7 வயது சிறுமி: CEO என்ன சொன்னார் தெரியுமா? வியக்க வைக்கும் காரணம்..!!

Read Time:3 Minute, 57 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70பிரித்தனியாவைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் கூகுள் நிறுவனத்திற்கு எழுதிய வேலை வாய்ப்பு கடிதம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பிரித்தானியாவின் Hereford பகுதியைச் சேர்ந்தவர் Chloe (7). இவர் அண்மையில் கூகுள் நிறுவன CEO அதாவது தலைமை அதிகாரி அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், தன்னுடைய பெயர் Chloe என்றும் தன்னுடைய மிகப் பெரிய விருப்பம் கூகுள் நிறுவனத்தில் வேலை செய்வது என்று கூறியுள்ளார். மேலும் தனக்கு சொக்லேட் நிறுவனத்தில் வேலை செய்வதும் மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து ஒலிம்பிக்கில் நீச்சல் பிரிவில் பங்கேற்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்காக தான் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நீச்சல் பயிற்சிக்கு செல்வதாக கூறியுள்ளார்.

தன்னுடைய அப்பா சொன்னார் கூகுள் நிறுவனத்தில் வேலை செய்தால், அங்கு பீன்ஸ் இருக்கையில் அமர்ந்து வேலை பார்க்கலாம் என்றும் அங்கு வேலை பார்ப்பது ஒரு விளையாட்டு போன்று இருக்கும் என்று கூறியதாக எழுதியுள்ளார்.

தான் தற்போது TABLET பயன்படுத்தி வருவதாகவும், அதில் தான் ரோபாட் விளையாட்டுக்கள் மற்றும் பல அதில் தான் கற்றுக்கொண்டு வருவதாகவும், இதனால் கம்யூட்டர் பற்றி அனைத்தையும் தெரிந்து கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

இதனால், தான் ஒரு நாள் நிச்சயம் கம்ப்யூட்டர் வாங்குவேன் என்று தன் அப்பா கூறியதாக தெரிவித்துள்ளார். தான் ஒரு சிறந்த குழந்தை என்றும், தன்னுடைய படிப்புகள் அனைத்தும் மிகச்சிறப்பாக உள்ளது என்று தன் அம்மா, அப்பாவிடம், தன்னுடைய பள்ளி ஆசிரியர்கள் கூறியதாக தெரிவித்துள்ளார்.

கூகுளில் வேலை செய்ய வேண்டும் என்றால் தன் அப்பா உங்கள் முகவரிக்கு இணையத்தில் அனுப்ப வேண்டும் என்று கூறினார். அதனால் தங்களுக்கு தான் கடிதம் எழுதியுள்ளதாகவும், நிச்சயம் ஒரு நாள் தான் கூகுளில் வேலை செய்வேன் என்று உறுதிப்பட கூறியுள்ளார்.

இதற்கு கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி CEO உடனடியாக பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தங்களுடைய கடிதம் கிடைத்தது.

மிக்க நன்றி, நீங்கள் கம்யூட்டர் மற்றும் ரோபட் போன்றவைகளில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறீர்கள், அதனால் தங்களுடைய குறிக்கோளில் கவனம் சிதறாமல் செயல்படுங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

அதுமட்டுமின்றி நீங்கள் ஒலிம்பிக்கிலும் பங்கு பெறலாம் என்று கூறியுள்ளார். மேலும் தங்கள் படிப்புகளை முடித்து விட்டு, வேலை வாய்ப்பு தொடர்பாக தங்கள் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்புங்கள் என்று கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்க போர் கப்பலை நெருங்கிய ரஷ்ய போர் விமானங்கள்..!! (வீடியோ)
Next post வெண்டைக்காய் சாப்பிட்டா வெவரமாகலாம்..!!