தளபதியின் ரசிகனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்: ஜுனியர் நடிகர்..!!

Read Time:2 Minute, 11 Second

201702161447284350_Vijay-fan-about-thalapathy-61-atlee-movie_SECVPF‘தெறி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அட்லியுடன் இணைந்து பணியாற்றி வருகிறார் விஜய். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் நடித்த ஜுனியர் நடிகர் ஒருவர் விஜய்யை பற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறும்போது, நான் விஜய் நடிக்கும் படத்தில் ஜுனியர் ஆர்ட்டிஸ்டாக நடித்ததன் மூலம் விஜய் படத்தின் முழு நாள் சூட்டிங்கை நான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நான் தளபதியின் பக்கத்திலேயே நிற்பது மாதிரியான காட்சி இருந்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

அப்போது, விஜய, தன்னுடைய நடிப்பால் அந்த முழு யூனிட்டையும் கைதட்ட வைக்கிற அளவுக்கு ஒரு காட்சியில் நடித்து முடித்தார். அதேபோல், அவர் படப்பிடிப்பு தளத்திற்குள் வருகிறபோது ரசிகர்களை தனது சிரிப்பாலும், கைகளை அசைத்தும் சந்தோஷப்படுத்தினார்.

ரொம்பவும் ரிஸ்க்கான சண்டைக் காட்சியில் டூப் இல்லாமலும், ரோப் இல்லாமலும், சேப்டி பெல்ட் இல்லாமலும் செய்தார். அவருக்கான குடையை பிடிப்பதற்குக்கூட இன்னொரு ஆள் வைத்துக் கொள்ளாமல், அவரே முழு நாளும் வைத்திருந்தார். இவ்வளவு எளிமையாக ஒரு மனிதர் இருக்கலாம். ஆனால், ஒரு பிரபலம் இப்படி இருப்பது மிகவும் அரிது. அவருடைய ரசிகனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கையை பிரதிபண்ணும் தமிழகம்..!! (கட்டுரை)
Next post ஜேர்மனியில் பயங்கரம்: 60 வயது மூதாட்டியை கற்பழித்த 20 வயது இளைஞன்..!!