கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமியுடன் இணையும் சமந்தாவின் காதலர்..!!

Read Time:2 Minute, 8 Second

201702161308355701_Samanthas-Beau-To-Debut-In-Dhuruvangal-Pathinaaru_SECVPFகார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் நடித்து வெளியான `துருவங்கள் பதினாறு’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 21 வயதே ஆன இளம் இயக்குநரின் முதல் படமான `துருவங்கள் பதினாறு’ முற்றிலும் மாறுபட்ட கதை களத்தில் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், `துருவங்கள் பதினாறு’ படத்திற்கு பிறகு கார்த்திக் நரேன் `நரகாசுரன்’ என்ற சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தை இயக்க உள்ளார்.

இப்படத்தில் தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவின் முக்கிய நடிகர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக முன்னதாக கார்த்திக் நரேன் அறிவித்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து தமிழ் சினிமா சார்பில் நடிகர் அரவிந்த்சாமி இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகினார். அவரைத்தொடர்ந்து மற்ற நடிகர்களுக்கான தேர்வு நடைபெற்று வரும் நிலையில், சமந்தாவின் வருங்கால கணவரான நாக சைதன்யா `நரகாசுரன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாக சைதன்யா அறிமுகமாகும் முதல் நேரடி தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக `விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு பதிப்பில் நாக சைதன்யா நடித்திருந்தார்.

மலையாள நடிகர் யார் நடிக்க உள்ளார் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜேர்மனியில் பயங்கரம்: 60 வயது மூதாட்டியை கற்பழித்த 20 வயது இளைஞன்..!!
Next post முகப்பரு, சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் பூசணிக்காய் ஃபேஸ் பேக்..!!