சருமத்தை பொலிவாக்கும் இயற்கை பேஸ்பேக்..!!

Read Time:2 Minute, 9 Second

201702251353274805_natural-face-pack_SECVPFகண்ட அழகு சாதனப் பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சரும ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு விரைவில் முதுமைத் தோற்றத்தைத் தான் பெறக்கூடும். இயற்கை முறையில் சருமத்தை பராமரித்தால் மட்டுமே சருமம் பொலிவுடன் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

ரோஸ் வாட்டர் – 3 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
சந்தனப் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் ஆயில் – 2 டீஸ்பூன்
கற்றாழை ஜெல் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

முதலில் ஒரு பௌலில் எலுமிச்சை சாறு, ரோஸ் வாட்டர் மற்றும் சந்தனப் பவுடர் சேர்த்து நன்கு கலந்து, மஸ்லின் துணியைப் பயன்படுத்தி, அதில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றிவிட வேண்டும். இப்போது கெட்டியான ஒரு பேஸ்ட் கிடைத்திருக்கும்.

பின்பு அத்துடன் கற்றாழை ஜெல், ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து, காற்றுப்புகாத ஒரு டப்பாவில் போட்டுக் கொள்ள வேண்டும்.

தினமும் இரவில் படுக்கும் முன், வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவி, துணியால் துடைத்துவிட்டு, தயாரித்து வைத்துள்ள க்ரீம்மை முகத்தில் தடவ வேண்டும். மசாஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை. இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், நிச்சயம் சருமத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காண முடியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செக்ஸ் விளையாட்டு முத்தங்கள் எவை ?..!!
Next post 112 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட ஆதிசிவன் சிலை!! இப்படித்தான் இருக்கிறார்..!! (வீடியோ)