112 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட ஆதிசிவன் சிலை!! இப்படித்தான் இருக்கிறார்..!! (வீடியோ)

Read Time:4 Minute, 17 Second

94834206_sivanstatueகோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தில் 112 அடி உயரத்தில் ஆதியோகி சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6 மணிக்கு திறந்துவைக்கிறார். தற்போது, ஈஷா மையத்தில் நூற்றுக்கணக்கானோர் குவிந்துள்ளனர். மிகப்பிரமாண்டமாய்க் காட்சியளிக்கும் இந்தச் சிலையை ஏராளமானோர் கண்டுகளித்து வருகின்றனர்.

எதிர்ப்பைப் புறக்கணித்து, ஈஷா மைய சிவன் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றாார் மோதி

கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தில் 112 அடி உயரத்தில் ஆதியோகி சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6 மணிக்கு திறந்துவைக்கிறார். தற்போது, ஈஷா மையத்தில் நூற்றுக்கணக்கானோர் குவிந்துள்ளனர். மிகப்பிரமாண்டமாய்க் காட்சியளிக்கும் இந்தச் சிலையை ஏராளமானோர் கண்டுகளித்து வருகின்றனர்.

எதிர்ப்பைப் புறக்கணித்து, ஈஷா மைய சிவன் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றாார்

கோயம்புத்தூர் ஈஷா யோக மையத்தில் நிறுவப்பட்டுள்ள, 112 அடி சிவன் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில், எதிர்ப்பையும் மீறி இந்தியப் பிரதமர் மோடி பங்கேற்றார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஜக்கி வாசுதேவ் என்ற ஆன்மிக குருவினால் நடத்தப்பட்டு வரும் ஈஷா யோக மையத்தால் 112 அடி உயரமுள்ள ஆதி யோகி சிவன் சிலை நிறுவப்பட்டுள்ளது.

மகா சிவராத்திரி தினமான இன்று, இந்த சிலை பிரதமரால் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கென தனி விமானம் மூலம் பிரதமர் மோதி கோயம்புத்தூர் வந்தார். ஈஷா யோக மையத்திற்கு வந்த அவர், அந்த மையத்தில் உள்ள தியான மண்டபத்தில் ஜக்கி வாசுதேவுடன் இணைந்து தியான லிங்கத்திற்கு தீபாராதனை காட்டி தியானத்தில் ஈடுபட்டார்.

பின்னர் 112 அடி உயரம் உள்ள ஆதியோகி சிவன் சிலையை ஜோதி ஏற்றி, திறந்து வைத்த பிரதமர் மோதி, தொடர்ந்து விழாமேடையில் உடுக்கை அடித்தார். இது தொடர்பான புத்தகம் ஒன்றையும் வெளியிட்ட பிறகு பேசிய நரேந்திர மோதி, யோகாவின் சிறப்புகளை விவரித்தார்.

யோகாவைப் பின்பற்றுவதன் மூலம், மனம், உடல் மற்றும் அறிவு ஆகிய அனைத்தும் ஒருங்கிணைக்கப்படுவதாகவும், இது ஆரோக்கியத்துக்கான அஸ்திவாரம் என்றும் குறிப்பிட்டார்.

ஈஷா யோகா மையம் பல்வேறு ஆக்கிரமிப்புகளில் ஈடுபட்டுவருவதால் இந்த விழாவில் பிரதமர் கலந்துகொள்ளக் கூடாது என சூழல் அமைப்புகள் வலியுறுத்திவந்தன.

இது தொடர்பாக பல்வேறு அமைப்புக்களின் சார்பில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.

இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநர் வித்யாசாகர் ராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சருமத்தை பொலிவாக்கும் இயற்கை பேஸ்பேக்..!!
Next post துணி துவைக்கும் இயந்திரத்தில் சிக்கி 3 வயது இரட்டை குழந்தைகள் உயிரிழப்பு..!!