வடகொரிய அதிபரின் அண்ணனை ஏன் கொலை செய்தேன்: கொலையாளி பெண் பரபரப்பு வாக்குமூலம்..!!
வட கொரிய அதிபரின் அண்ணன் கிம் ஜோங் நம் கடந்த 13 ஆம் திகதி மலேசியா தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
கிம் ஜோங் நாம் முகத்தில் வி.எக்ஸ் என்னும் கொடிய ரசாயன விஷத்தை வீசி இக்கொலை நடத்தப்பட்டது. இந்த ரசாயன பொருளை விமான நிலையத்தில் அமர்ந்திருந்த கிம்ஜாங்-நம் முகத்தில் ஒரு பெண் வீசியது அங்கிருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவாகி இருந்தது.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மலேசியா பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் சில பெண்கள் உட்பட பலரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதைத்தொடர்ந்து விமான நிலையத்தில் கிம்ஜாங்-நம் முகத்தின் மீது ரசாயன விஷயத்தை வீசிய பெண்ணை பொலிசார் தேடி வந்தனர்.தீவிரவிசாரணைக்கு பின்னர் அப்பெண்ணை பொலிசார் கைது செய்தனர்.
அதில் அவரது பெயர் சிதிஅய்சியா என்றும் இவர் இந்தோனேசியாவை சேர்ந்தவர் என்ற தகவலும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து அப்பெண் கூறுகையில், விமான நிலையத்தில் இருந்த தன்னிடம் அடையாளம் தெரியாத நான்கு பேர் ஏதோ ஒரு பொருளை கொடுத்தனர்.
இது தொலைக்காட்சி வேடிக்கை நிகழ்ச்சிக்காக நடத்துவதாகவும், அதனை ஒரு நபர் மீது வீச வேண்டும் என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த பொருள் குழந்தைகள் உடலில் தடவும் வாசனை எண்ணெய் என்றும் அதற்காக தனக்கு 90 அமெரிக்க டொலர் தனக்கு தந்ததாக அப்பெண் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
Average Rating