போலீஸ் காவலில் பாகிஸ்தானை சேர்ந்த திருநங்கையர் படுகொலை?..!!

Read Time:3 Minute, 10 Second

201703071730169271_Activists-say-two-Pakistani-transgender-women-beaten-to_SECVPFபாகிஸ்தானில் சுமார் 5 லட்சம் பேர் திருநங்கையர்களாக மாறி, பெண்களாக வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2012-ம் ஆண்டில் பாகிஸ்தானில் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது முதன்முறையாக திருநங்கையர்களை பற்றிய எண்ணிக்கை கணக்கு ஏட்டில் பதிவு செய்யப்பட்டது. 2013-ம் ஆண்டு இவர்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது.

இவர்களில் சிலர் சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வீட்டு வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், சவுதி அரேபியாவில் இதுபோல் வேலை செய்துவரும் சில திருநங்கையர்கள் சமீபத்தில் தங்களுக்குள் ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

பெண்களைபோல் உடைகள் அணிந்தபடி ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என்று விருந்து நிகழ்ச்சி களைகட்டியபோது உள்ளே நுழைந்த போலீசார் அங்கிருந்து சுமார் 35 திருநங்கையர்களை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதுதொடர்பான செய்திகள் சவுதி நாட்டு ஊடகங்களில் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், காவல் நிலையத்தில் நடத்திய விசாரணையின்போது இரு திருநங்கையர்களை போலீசார் அடித்து
கொல்லப்பட்டதாக பாகிஸ்தானில் இயங்கிவரும் ‘புளூ வெய்ன்ஸ்’ என்ற திருநங்கையர்களுக்கான தொண்டு நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக, பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்த அமைப்பின் தலைவி பர்ஸானா ரியாஸ், சவுதி அரேபியாவில் எங்கள் இனத்தை சேர்ந்த இருவர் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டது தொடர்பாக எங்களுக்கு கிடைத்த தகவல்களையும், ஆதாரங்களையும் நம் நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஒப்படைத்துள்ளோம் என்று குறிப்பிட்டார்.

சவுதி அரசிடம் பேசி, இன்னும் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள முப்பதுக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பெண்களை (திருநங்கையர்களை) உடனடியாக விடுதலை செய்வதற்கான முயற்சியில் நமது அரசு தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டை சவுதி அரசு வட்டாரங்கள் மறுத்துள்ளதாக தெரியவருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிரெஸ்ஸோவின் நோக்கியா 3310 சுமார் 3,46,000 ரூபாவிற்கு விற்பனை..!!
Next post போர்க்கொடி தூக்குவோர் சாதிக்கப் போவது என்ன?..!! (கட்டுரை)