உலக அளவில் டிரெண்டை ஏற்படுத்திய அஜித்தின் ஒரே ஒரு ஸ்டில்..!!

Read Time:2 Minute, 9 Second

17353033_1449261041811145_960944713_nதல அஜித் படம் வெளிவந்தாலும், வெளிவராவிட்டாலும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் அஜித் குறித்த செய்தி வெளியாகி அது மாநில அளவில், இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருவது வாடிக்கையான ஒன்றாக ஆகிவிட்டது.

கடந்த ஆண்டு அஜித் நடித்த படம் எதுவும் வரவில்லை என்றாலும் அவர் குறித்த செய்திகள் வெளிவராத நாட்களே இலலை என்று கூறலாம். இந்நிலையில் அஜித் நடித்து வரும் ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று பல்கேரியாவில் தொடங்கியது.

இந்த படப்பிடிப்பு நடந்தபோது எடுக்கப்பட்ட அஜித்தின் புகைப்படம் ஒன்று நேற்று வெளியாகி இணையதளங்களே ஸ்தம்பிக்கும் அளவுக்கு மிக வேகமாக பரவி வந்தது. குறிப்பாக டுவிட்டரில் உலக அளவில் இந்த புகைப்படம் டிரெண்ட் ஆகியது. கிழிந்த சட்டையுடன் ரத்தக்காயங்களுடன் அஜித் இருக்கும் இந்த ஸ்டில்லை பார்க்கும்போது இந்த படத்திற்காக அஜித் எந்த அளவுக்கு தனது உழைப்பை கொட்டியிருக்கின்றார் என்பதை அறிய முடிகிறது.

பல்கேரியாவில் தற்போது நடைபெற்று வரும் ‘விவேகம்’ படப்பிடிப்பில் கிளைமாக்ஸ் மற்றும் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. அஜித், காஜல் அகர்வால், அக்சரா ஹாசன், விவேக் ஓபராய் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குண்டாக இருப்பவர்கள் எந்த வகையான உடைகளை அணியலாம்..!!
Next post நான்கு வயது குழந்தையின் கண்ணை பிடுங்கி எறிந்த கொடூர தாய்: அதிர்ச்சி தரும் காரணம்..!!