அப்பாவாக மாறிய அம்மா, மகளாக மாறிய மகன்..!!

Read Time:3 Minute, 4 Second

625.0.560.320.160.600.053.800.668.160.90அமெரிக்காவின் டெட்ராய்ட்டில் மகனும் தாயும் அறுவை சிகிச்சை மூலம் பாலினம் மாறிய விநோத சம்பவம் நடந்துள்ளது.

லெஸ் மேய்ஷன் மற்றும் எரிக்கின் மகனான காரி மேய்ஷன் என்னும் 15 வயது சிறுவன் அறுவை சிகிச்சை மூலம் முதலில் பெண்ணாக மாறினார்.

இவர் அவருடைய பெற்றோரிடம் சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு பெண்ணாக உணர்வதாகக் கூறியுள்ளார்.

பின்னர் அவர்களுடைய முழு சம்மதத்துடன் அறுவை சிகிச்சை செய்து கொண்டு தனது பாலினத்தை மாற்றினார்.

அதனை தொடர்ந்து பல ஆண்டுகளாக ஆணாக மாற விரும்பிய அவருடைய அம்மா எரிக்கும், அவருடைய விருப்பத்தை கணவரிடமும் மகளிடமும் தெரிவித்துள்ளார்.

அதற்கு அவர்கள் இருவரும், சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறினார்.

இது குறித்து அவுஸ்திரேலிய செய்தி நிறுவனத்திற்கு தனது குடும்பத்தினருடன் பேட்டியளிக்கும்போது, முதலில் இந்த முடிவு எடுக்க மிகவும் அச்சமடைந்ததாக எரிக் குறிப்பிட்டார்.

மேலும் சமுதாயத்தில் உள்ள பிறரும், நண்பர்களும் தவறாக நினைக்க வாய்ப்புள்ளதாக கூறினார்.

“நான் எனது பெற்றோருக்கு பெருமை தேடித் தர விரும்பியதாகவும் ஆனால் எனது பெற்றோர்கள் என்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்களோ என்ற பயம் முதலில் இருந்ததாக” காரி மேய்ஷன் செய்தியாளர்களிடம் கூறினார்.

தனது மகன் மகளாக மாறியது மற்றும் மனைவி ஆணாக மாறியது குறித்து லெஸ் மேய்ஷன் கூறும்போது, மனிதனின் வெளிப்புற தோற்றத்தை விட உட்புறத்தோற்றமே முக்கியம் என கூறினார்.

அவர்கள் இருவரையும் முதலில் எப்படி அன்பு செய்தேனோ அதை விட அதிகமாக இப்போது அன்பு செய்வதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தனது மகளும், மனைவியும் பாலின மாற்று அறுவைசிகிச்சை செய்து கொண்டதை பெருமையாக கூறும் லெஸ் மேய்ஷன் போன்றோரால் திருநங்கைகள் மற்றும் LGPT சமூக மக்களுக்கு பெரும் உந்துதலாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் முற்போக்கு சிந்தனை உள்ளவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உதடு வெடிப்பு அதிகமா இருக்கா தேங்காய் எண்ணெய் யூஸ் பண்ணுங்க..!!
Next post பெண்மையை அலட்சியப்படுத்தும் பெண்கள்..!!