காஷ்மீர் மாநில சுற்றுலா தூதராக ஆகிறார் சல்மான் கான்..!!

Read Time:2 Minute, 14 Second

201703181256161146_Salman-Khan-as-brand-ambassador-of-Kashmir-tourism-says_SECVPFகாஷ்மீர் மாநிலத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் நேற்று மும்பையில் நிகழ்சிகள் நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக அம்மாநில முதல்மந்திரி மெகபூபா முப்தி பங்கேற்றார். அப்போது காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் நோக்கில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முப்தியிடம், ”காஷ்மீர் சுற்றுலா தூதராக பாலிவுட் நடிகர்களை பயன்படுத்த விருப்பமா? ”என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு , ”நடிகைகள் அலியாபட் மற்றும் கான் சகோதர்கள் ( ஆமீர் கான், ஷாருக் கான், சல்மான் கான்) ஆகியோர்களை நியமிக்க யோசனை இருக்கிறது” என பதிலளித்தார். ”ஒருவரை மட்டும் நியமிக்க வேண்டுமானால் யாரை தேர்வு செய்வீர்கள்?” எனக் கேட்டதற்கு ,” சல்மான் கான் தான் என்னுடைய தேர்வாக இருக்கும்” எனப் பதிலளித்தார்.

கடந்தாண்டு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதி புர்கான் வாணி பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு இன்று வரை இயல்பு நிலை திரும்பவில்லை. எனவே, அம்மாநிலத்தின் சுற்றுலாத் துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், இது போன்று நடிகர்களை சுற்றுலா தூதர்களாக நியமிக்கும் பட்சத்தில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் காஷ்மீர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புகை இல்லை – மாசு கிடையாது: சாலை போக்குவரத்துக்கு மாற்றாக பறக்கும் கார்கள் அறிமுகம்..!! (வீடியோ)
Next post இந்தப் பெண் செய்யும் அசிங்கத்தைப் பாருங்கள்..!! (வீடியோ)