மரணப்படுக்கையிலிருந்த மகன்! ஒரே பதிவில் குற்றவாளியை ஓப்புக்கொள்ள வைத்த தாய்..!!

Read Time:2 Minute, 34 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90பிரித்தானியாவில் தாய் ஒருவர் குத்தப்பட்டு மரணப்படுக்கையிலிருந்த மகனுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டதை பார்த்த குற்றவாளி , தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

Cheltenham பகுதியில் வைத்து போதை கும்பலுக்காக பணியாற்றி வந்த 17 வயதான காம்ரன் கிறீன் என்ற இளைஞனை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தி தப்பி ஓடியுள்ளார்.

பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறுவன் சில தினங்களில் உயிரிழந்துள்ளார். இதன்போது, சிறுவனின் தாய் மரணப்படுக்கையிலிருந்த மகனுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.

சம்பவம் குறித்த விசாரணை மேற்கொண்டு பொலிசார், மூன்று நாட்களில் சந்தேகத்தின் அடிப்படையில் 31 வயதான ஸ்டீவன் சார்பெல் என்ற நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நீதிமன்றத்தில் குற்றவாளி குற்றத்தை மறுத்து வந்த நிலையில் சிறுவனின் தாய் மகனுடன் எடுத்து புகைப்படத்துடன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதில், ஒரு கத்தி என்ன செய்யும் என்பதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். குற்றவாளி மட்டுமில்லை அவரை சுற்றி உள்ளவர்களுக்கும் இதை புரிந்துக்கொள்ள வேண்டும்.

கத்தியால் எதையும் எந்த பிரச்னையும் முடிவுக்கு கொண்டு வர முடியாது. நீங்கள் குத்திவிட்டு சிறைக்கு செல்வீர்கள். ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் நிலை குறித்த நினைத்து பாருங்கள் என வெளியிட்டிருந்தார்.

இதை படித்த குற்றவாளி ஸ்டீவன் சார்பெல் நீதிமன்றத்தில் கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவருக்கான தண்டனை விரைவில் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விரல்களின் கருமையை போக்கும் வீட்டு வைத்தியம்..!!
Next post ஜெயலலிதாவின் இரட்டை இலை சின்னம் முடக்கம்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!!