16 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய 12வயது சிறுவன்..!!
Read Time:1 Minute, 21 Second
12 வயது சிறுவன் தந்தையான சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் 16 வயது சிறுமி ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அச்சிறுமிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
இதுபற்றி எர்ணாகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் 16 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கியது யார்? என விசாரித்தனர்.
அப்போது 12 வயது சிறுவன் தான் இதற்கு காரணம் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
எனினும் இது தொடர்பாக சந்தேகம் அடைந்த போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு சிறுவனை அனுப்பி வைத்தனர்.
இதில் 12 வயது சிறுவன் தான் 16 வயது பெண்ணின் குழந்தைக்கு தந்தை என்பது உறுதியானது. இதையடுத்து சிறுவன் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Average Rating